ஒரு வாரம் ஆசிரமத்தில் தங்கிய நடிப்பு ராட்சசி: காரணம் தெரியுமா?
சென்னை: நடிகை நித்யா மேனன் ஆசிரமம் ஒன்றில் ஒரு வாரம் தங்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் மிஷன் மங்கள் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் அவர் தனது திரையுலக வாழ்க்கை குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

அக்ஷய் குமார்
மிஷன் மங்கள் படக்குழு என்னை நல்லபடியாக கவனித்துக் கொண்டது. நான் புதிதாக நடிக்க வந்தவள் போன்று நடத்தினார்கள். நான் தென்னிந்திய படங்களில் நடித்துள்ளேன் என்று கூறியும் என்னை கிண்டல் செய்தார்கள். ஆனால் என் மீதான அன்பால் கலாய்த்தார்கள். அக்ஷய் குமார் என் படங்களை பார்த்துள்ளார். என்னை பற்றி நிறைய கேள்விப்பட்டதாக தெரிவித்தார். யாருமே தாங்கள் பெரிய ஸ்டார் என்ற பந்தா இல்லாமல் இருந்தனர்.

படிப்பு
நான் ஒரு வாரம் ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அங்கு நிறைய கற்றுக் கொண்டேன். ஆசிரமத்தில் மதத்தை பற்றி அல்ல என்னை பற்றி கற்றுக் கொண்டேன். அங்கு சும்மா உட்கார்ந்து ரிலாக்ஸ் செய்ய முடியாது. பாடங்களை கற்றுக் கொடுக்க பல பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. ஆனால் நம்மை பற்றி கற்றுக் கொடுக்க எந்த கல்லூரியும் இல்லை.

ஷூட்டிங்
நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரத்யேகமாக தயாராவது எல்லாம் இல்லை. பல நேரம் இறுதி ஸ்க்ரிப்ட்டை கடைசி நேரத்தில் தான் கொடுக்கிறார்கள். நான் சீக்கிரம் கற்றுக் கொள்வேன் என்பது அவர்களுக்கு தெரியும். சில நேரம் ஷூட்டிங் நடக்கும் நாள் காலையில் தான் ஸ்க்ரிப்ட்டே தருவார்கள்.

கதாபாத்திரம்
ஒரு படத்தின் கதையை கேட்டால் அப்படியே என் மனதில் பதிந்துவிடும். நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவேன். காஸ்டியூம் போட்டவுடன் கதாபாத்திரமாக மாறிவிடுவேன். என் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்துவிடுகிறார்கள் என்கிறார்கள். அதற்கு பின்னால் எந்த ரகசியமும் இல்லை. நான் நானாக இருக்கிறேன். அவ்வளவு தான் என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











