இயக்குனர் மிகக் கவனமாக இருக்கிறார்- ஜெயலலிதா பயோபிக் குறித்து நித்யா மேனன்!
சென்னை: ஜெயலலிதா பயோபிக் திரைப்படம் குறித்த முக்கிய விஷயத்தை நித்யா மேனன் பகிர்ந்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜெயலலிதா பயோபிக் சீரிஸ் ஆண்டுபோல இருக்கப்போகிறது. லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் மற்றும் பிரியதர்ஷினி என வரிசைகட்டி ஜெயலலிதா பயோபிக் படம் இயக்க உள்ளனர்.

அதில் இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் மெர்சல் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தி அயர்ன் லேடி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் பற்றி பேட்டியளித்துள்ள நித்யா மேனன், இது மிகப்பெரிய படம். பிரியதர்ஷினி என்னிடம் கதை சொன்னபோது மிகவும் பிடித்திருந்தது. கதை குறித்து மிகுந்த கவனத்தோடு அவர் இருக்கிறார். ஒரு பயோபிக் படம் பண்ணும்போது முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரத்திற்கு நியாயமான, தேவையான நடிப்பை வழங்க வேண்டும் என சொல்லிவிட்டேன்.
சரியான பாதையில் மிகுந்த நம்பிக்கையோடு பட வேலைகளை பிரியதர்ஷினி செய்துவருகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். அது ஒரு நடிகையாக எனக்கு மிக சுவாராஸ்யமானதாக இருக்கப்போகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நித்யா மேனன் நடித்துள்ள ப்ரானா என்கிற மலையாள திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக அக்ஷய்குமாரின் மிஷன் மங்கல் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











