twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தி அயர்ன் லேடி - சிங்கப் பெண் ஜெ.வாக வாழ்ந்து காட்டுவாரா நித்யா மேனன்

    By R VINOTH
    |

    சென்னை: நித்யாமேனனை கதாநாயகியாக கொண்டு "தி அயர்ன் லேடி" என்ற பெயரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளது. இயக்குநர் பிரியதர்ஷினி இப்படத்தை இயக்க உள்ளார்.

    சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஃபோட்டோ கிராஃபர் எடுத்த ஃபோட்டோ ஒன்று சிறந்த ஃபோட்டோவுக்கான பரிசைப் பெற்றது. அந்த ஃபோட்டோவில் அப்படி என்ன இருந்தது என்பது பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

    50 அடி உயர ஜெயலலிதாவின் கட் அவுட், அந்த கட் அவட்டில் பேக் கிரவுண்ட் படமாக ஒரு ஆண் சிங்கம் தன் பிடறியை உலுக்கியபடி கம்பீரமாக பார்க்கிறது. அந்த சிங்கத்தையும், ஜெயலலிதாவையும் ஒரு 8 வயதுடைய சிறுமி ஆ வென ஆச்சரியத்துடன் வாய் பிளந்து பார்ப்பது போன்று அந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டிருந்தது. அது தான் ஜெயலலிதா.

    கம்பீர ஜெயலலிதா

    கம்பீர ஜெயலலிதா

    அந்த அளவுக்கு கம்பீரமான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பல்வேறு தரப்பினரும் முயன்று வருகின்றனர். அவருடைய அந்த கனிவு கலந்த கம்பீரமான பார்வை, அந்தப் பார்வையாலேயே தன் எதிரில் நிற்பவரின் மனதை ஊடுறுவிப் பார்க்கும் திறமை ஒரு சர்க்கஸ் ரிங் மாஸ்டரைப் போல அனைவரையுமே கட்டிப் போட்ட ஆளுமை என இவை அனைத்தையுமே உள்வாங்கிக் கொண்டு யாரால் அவரைப் போல் நடிக்க முடியும் என்ற கேள்வி அனைவர் முன் தோன்றியது.

    நித்யாமேனன்

    நித்யாமேனன்

    அப்போது தான் இயக்குநர் பிரியதர்ஷினி, நடிகை நித்யா மேனனை கதாநாயகியாக கொண்டு தி அயர்ன் லேடி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

    தலைவி கங்கனா ரணாவத்

    தலைவி கங்கனா ரணாவத்

    அதே சமயம், கங்கனா ரணாவத் நடிப்பில் தலைவி என்ற பெயரில் இயக்குநர் விஜய்யும் பட வேலைகளை தொடங்கி உள்ளார். இயக்குனர் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிசாக இயக்கி வருகிறார். அக்டோபர் மாதம் தலைவி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

    அப்படத்திற்காக, தமிழ் மொழி உச்சரிப்பு, பரத நாட்டியம் கற்பது போன்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் கங்கனா ரணாவத்.

    தி அயர்ன் லேடி

    தி அயர்ன் லேடி

    இந்நிலையில், நித்யா மேனன் மலையாளத்தில் தான் நடித்துள்ள கொளம்பி படத்திற்காக நிருபர்களை சந்தித்துள்ளார். அப்போது தி அயர்ன் லேடி படம் பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த நித்யா மேனன், தி அயர்ன் லேடி படத்திற்காக நடிகர்கள், படக்குழுவினர் நிறைய முன் தயாரிப்புகளில் (Pre-Production) ஈடுபட வேண்டும்.

    ஜெ. ரசிகர்கள் உற்சாகம்

    ஜெ. ரசிகர்கள் உற்சாகம்

    இயக்குநர் பிரியதர்ஷினி இந்த படத்தை சென்சேஷனான விஷயமாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு படம் செய்ய விரும்பவில்லை. நாங்கள் இப்படத்திற்கு நியாயம் செய்ய விரும்புகிறோம். எனவே, உடனடியாக படத்தைத் தொடங்கி எந்தத் சமரசத்திற்கும் உட்பட விரும்பவில்லை. படம் தற்போது ப்ரீ-புரொடக்ஷன் நிலையில் உள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பை தொடங்குவோம் எனக் கூறியுள்ளார். இதை கேட்ட ஜெயலலிதா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    English summary
    The biography of the late Chief Minister Jayalalitha is titled
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X