Nithya Menon Birthday:நித்யா மேனன் பிறந்தநாள்.. செம சாதனை செய்த தேன்மொழி பாடல்

சென்னை: Nithya Menon Birthday (நித்யா மேனன் பிறந்தநாள்) திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற தேன்மொழி பாடல் 50 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மித்ரன் ஆர்.ஜவஹர். இவர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கினார். இவர்ற்றில் உத்தமபுத்திரனை தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. மித்ரன் இயக்கும் படங்கள் ஃபீல் குட் படங்களாக இருக்கும் என்ற கருத்து ரசிகர்களிடையே நிலவுவது உண்டு.

Nithya Menon Birthday: Thenmozhi Song Crossed 50 Million Views in Youtube

தனுஷுக்கு கம்பேக் கொடுத்த மித்ரன் ஆர்.ஜவஹர்: சிறந்த நடிகர் என்று பெயரெடுத்த தனுஷுக்கு தமிழில் பட்டாஸ், ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. இதனால் தமிழில் தனுஷுக்கு கட்டாயம் ஒரு ஹிட் தேவைப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் மித்ரன் ஆர்.ஜவஹர் திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கினார். நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, ராஷிகண்ணா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஃபீல் குட் சினிமா என்று பெயரெடுத்த திருச்சிற்றம்பலம்: அனிருத் இசையமைப்பில் உருவான இந்தப் படம் கடந்த வருடம் வெளியானது. நீண்ட காலமாக நட்புடன் இருக்கும் ஒரு ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொள்வது என்ற ஒன்லைனை வைத்து மிகச்சிறப்பாக படத்தை உருவாக்கியிருந்தார் மித்ரன் ஆர்.ஜவஹர். படத்தை பார்த்த ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் ஃபீல் குட் படமாக இருக்கிறது என்றும் தனுஷுக்கு இது கம்பேக்காக அமைந்துவிட்டது என்றும் பாராட்டு தெரிவித்தனர்.

Nithya Menon Birthday: Thenmozhi Song Crossed 50 Million Views in Youtube

ரசிகர்கள் வைப் செய்த தேன்மொழி பாடல்: படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ட்ரெண்டாகின. குறிப்பாக சந்தோஷ் நாராயணன் பாடிய தேன்மொழி பாடலுக்கு ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை கொடுத்தனர். மேலும் அந்தப் பாடலுக்கும், பாடலில் இடம்பெற்ற குறிப்பிட்ட வரிகளுக்கும் ரீல்ஸ் செய்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைப் ஆகினர்.

50 மில்லியன் பார்வைகளை கடந்த தேன்மொழி பாடல்: இந்நிலையில் தேன்மொழி பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது இந்தப் பாடலை இதுவரை யூட்யூபில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டு, இந்தப் பாடலுக்கு வைப் ஆகாத ஆளே இருக்க முடியாது என தெரிவித்துள்ளது.

Nithya Menon Birthday: Thenmozhi Song Crossed 50 Million Views in Youtube

நித்யா மேனனின் பிறந்தநாள்: இதற்கிடையே நடிகை நித்யா மேனனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழும் அவர் திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருப்பார். குறிப்பாக பாரதிராஜாவுடன் இணைந்து அவ செய்யும் சேட்டைகளும், தனுஷ் மேல் இருக்கும் காதலை வெளிக்காட்ட முடியாமல் திணறும் இடத்திலும் நித்யா மேனனின் நடிப்பு அப்ளாஸை அள்ளியது குறிப்பிடத்தக்கது. அவரது பிறந்த நாளன்று தேன்மொழி பாடல் 50 மில்லியன் பார்வைகளை கடந்த சாதனையை படைத்துள்ளதை அடுத்து பலரும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X