நான் இயக்கிய நடிகைகளில் நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த அழகி: சேரன்

By Siva

சென்னை: தான் இயக்கிய நடிகைகளில் நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த அழகி என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

சேரன் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் சர்வானந்த் நாயகனாகவும், நித்யா மேனன் நாயகியாகவும் நடிக்கின்றனர். சந்தானம் காமெடியை கவனிக்கிறார்.

சேரனுக்கு கிராமத்து படங்கள் தான் வரும் என்ற நினைப்பை மாற்ற இந்த படத்தை மாடர்னாக எடுத்துள்ளதாக தெரிவித்தார் இயக்குனர்.

ஆங்கிலத்தில் கதை சொன்னால் தான் கால்ஷீட்

ஆங்கிலத்தில் கதை சொன்னால் தான் கால்ஷீட்

சில நடிகர்கள் ஆங்கிலத்தில் கதை சொன்னால் தான் கால்ஷீட் தருகிறார்கள் என்றும், அவர்கள் முன்பு தன்னை நிரூபித்துக் காட்ட விரும்பி இந்த படத்தை எடுப்பதாக சேரன் தெரிவித்தார்.

திமிர் பிடித்த அழகி

திமிர் பிடித்த அழகி

தான் இயக்கிய நாயகிகளில் நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த அழகி என்றார் சேரன். கதாபாத்திரமாகவே மாறி உணர்ச்சிகளை அற்புதமாக முகத்தில் கொண்டு வருபவர் நித்யா என்று சேரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கர்வமில்லா சந்தானம்

கர்வமில்லா சந்தானம்

சந்தானத்திடம் சாதித்துவிட்டோம் என்ற கர்வமே இல்லையாம். அவர் தனக்கு அளித்த மரியாதையைப் பார்த்து சேரன் ஆச்சரியப்பட்டாரம். சந்தானத்தின் அம்மாவுக்கு சேரன் படங்கள் மிகவும் பிடிக்குமாம். சேரன் படத்தில் நீ நடிக்க வேண்டும் என்று அம்மா கூறியதன்படி சந்தானம் இப்படத்தில் நடித்துள்ளாராம். இந்த தகவலை சேரன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X