மணப்பெண் கோலத்தில் நித்யா மேனன்.. அடடா என்ன ஒரு அழகு!
கொச்சி : நடிப்பில் நவரசத்தையும் காட்டி மிகச் சிறந்த நடிகையாக கொண்டாடப்படும் நித்யா மேனன் இப்பொழுது மணி ரத்னம் தயாரிப்பில் நவரசா வெப்சீரிஸில் நடித்து வருகிறார்.
அசோக் செல்வன், ரிது வர்மா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த தீனி சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி இருந்தது. இந்தப்படம் தெலுங்கில் நின்னிலே நின்னிலே என்ற பெயரிலும் ரிலீஸ் ஆனது.
விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்து 19(1)(a) என்ற மலையாள படத்தில் நடித்து வரும் நித்யா மேனன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிறிய கதாபாத்திரம்
தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் சரளமாக பேசி நடித்து பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் தான் நடிகை நித்யா மேனன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதில் தன்னுடைய முழு ஈடுபாட்டின் மூலம் நிறைவான நடிப்பை கொடுத்து மேலும் வலு சேர்ப்பார் . தமிழுக்கு 180 படத்தில் நடித்து அறிமுகமானவர் ஓகே கண்மணி, மெர்சல், 24, இருமுகன், காஞ்சனா 2 என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஃபேவரிட் படமும்
குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மான் நித்யா மேனன் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. நித்யா மேனனின் நேச்சுரலானா நடிப்பு பலரையும் ஈர்த்திருக்க இந்தப் படம் வெளியானபோது அலைபாயுதே பாகம்-2 எனவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது இளைஞர்களின் ஃபேவரிட் படமும் கூட .

ஃபேவரிட் படமும்
குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மான் நித்யா மேனன் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. நித்யா மேனனின் நேச்சுரலானா நடிப்பு பலரையும் ஈர்த்திருக்க இந்தப் படம் வெளியானபோது அலைபாயுதே பாகம்-2 எனவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது இளைஞர்களின் ஃபேவரிட் படமும் கூட .
Recommended Video

இரு மொழிகளிலும்
அசோக் செல்வன், ரிது வர்மா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த தீனி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஓடிடியில் நேரடியாக வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் நின்னிலே நின்னிலே என்ற பெயரில் வெளியிடப்பட்டது. நடிகர் நாசர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

உங்களுக்கு திருமணமா
தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு என பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்து 19 (1)(a) என்ற படத்தில் நித்யாமேனன் நடித்து வரும் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில் நடைபெற்று முடிந்துள்ளது. அதைத் தவிர மணிரத்னம் தயாரித்து வரும் நவரசா வெப் சீரிஸிலும் நடித்து வரும் நித்யாமேனன் இப்பொழுது வெள்ளை ஆடையில் கிறிஸ்துவ மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்க பலரும் உங்களுக்கு திருமணமா என கேட்டு வருகின்றனர். ஆனால் இது பிரபல ப்ராண்ட் ஒன்றுக்கு எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் என்பது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











