சின்ன வயசுலயே நம்ம ஷோபனா எவ்ளோ க்யூட்டா இருக்காங்க பார்த்தீங்களா.. எந்த படத்தில் தெரியுமா?

சென்னை: நித்யா மேனன் என்கிற பெயரையே ரசிகர்கள் மறந்து பக்கத்து வீட்டுப் பெண் ஷோபனாவாகவே கொண்டாடும் அளவுக்கு சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மாற்றியுள்ளது.

குண்டு முழியை வச்சிக்கிட்டு ஒவ்வொரு படங்களில் க்யூட்டாக நடித்து அசத்தி வருகிறார் நடிகை நித்யா மேனன்.

குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்த ஹனுமன் படத்தின் வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக டிரெண்டாகி வருகிறது.

க்யூட்டான குழந்தை

க்யூட்டான குழந்தை

பழைய படத்தின் வீடியோ ஒன்று ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் திடீரென டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த உடனே யாருப்பா இந்த குழந்தை பார்க்க அப்படியே நித்யா மேனன் சாயலில் இருக்காரே என ஆச்சர்யமாக ஆராய்ந்து பார்க்க அவர் வேறு யாரும் இல்லைங்க நித்யா மேனனே தான் என்கிற இன்பதிர்ச்சி ரசிகர்களின் பார்வையை மேலும் விரிவடையச் செய்கிறது.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

1998ல் பெட்ரிக் ஃபோகியா எனும் ஹாலிவுட் இயக்குநர் இயக்கத்தில் தபு லீடு ரோலில் நடித்த ஆங்கில திரைப்படமான ஹனுமன் படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார் நடிகை நித்யா மேனன். அந்த படத்தின் வீடியோ காட்சிகளைத் தான் தற்போது திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் தேடிப் பிடித்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரொம்பவே பப்ளி

ரொம்பவே பப்ளி

அப்பா அம்மா மலையாளிகளாக இருந்தாலும், வேலை காரணமாக கர்நாடகாவில் செட்டில் ஆகி விட்டனர். பெங்களூருவில் பிறந்த நடிகை நித்யா மேனன் ஹனுமன் படத்திற்கு பிறகு கன்னட படத்தில் தான் அறிமுகமானார். பின்னர்மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் 2011ம் ஆண்டு 180 மற்றும் வெப்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து அப்பவே ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக மாறினார்.

மெர்சல்

மெர்சல்

காஞ்சனா 2, 24 என தமிழில் பெரிய படங்களில் நடித்து வந்த நித்யா மேனனுக்கு அட்லி இயக்கத்தில் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றிமாறனின் மனைவியாக அந்த படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார்.

மணிரத்னம் படம்

மணிரத்னம் படம்

நன்றாக நடிக்கத் தெரிந்தவர்களுக்குத் தான் மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஏகப்பட்ட நடிகர்களே சொல்லி கேட்டிருக்கிறோம். துல்கர் சல்மான் உடன் இணைந்து ஓகே கண்மணி படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் காதல் பொங்க இவர் நடித்ததை ரசிகர்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.

ஷோபனா

ஷோபனா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய நடிகையாக மாறினாலும், சமீபத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனாவாக இயல்பான நடிப்பை கொடுத்து இப்படியொரு ஃபிரெண்ட் நமக்கு கிடைக்க மாட்டாங்களா என பசங்களை ஏங்க விட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக மாறி உள்ளார் நித்யா மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X