இன்னொரு நடிகையுடன் பிரபல நடிகை நித்யா மேனன் லிப்லாக்.. வைரலாகும் போட்டோ.. வலுக்கும் எதிர்ப்பு!

By

சென்னை: பிரபல நடிகை நித்யா மேனனின் லிப்லாக் முத்தக் காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Recommended Video

Nithya Menon Bold Kiss Controversy • Breathe Into The Shadows

சித்தார்த் நடித்த 180 படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், மலையாள நடிகை நித்யாமேனன்.

பிறகு வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல், சைகோ உட்பட சில படங்களில் நடித்தார்.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இப்போது ப்ரீத்: இன் டு தை ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் அபிஷேக் பச்சன், அமித் சாத், இவானா கவுர், சையாமி கெர், ஸ்ருதி பாப்னா உட்பட பலர் நடித்துள்ளனர். மயங்க் சர்மா இயக்கியுள்ளார். இந்த தொடரில், நித்யா மேனன் லெஸ்பியனாக நடித்துள்ளார்.

லிப்லாக் முத்தம்

லிப்லாக் முத்தம்

இந்த தொடரின் இரண்டாவது எபிசோடில் நித்யா மேனன், தன்னுடன் நடித்த சக நடிகையான சுருதிக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சியும் அதன் பின் இருவரும் ஆடைகளை களைந்து கட்டி பிடிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி ஆபாசமாக படமாக்கப்பட்டிருப்பதாக, ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதோடு இந்த காட்சிக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

எப்படி சம்மதித்தார்?

எப்படி சம்மதித்தார்?

திரைப்படங்களில் இதுவரை அதிக கிளாமராக கூட நடித்திராத நித்யா மேனன், எப்படி லிப் லாக் காட்சியில் நடித்தார் என்றும் அந்த ஆபாசக் காட்சியில் எப்படி நடிக்க சம்மதித்தார் என்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சினிமாவில் குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து வந்த நித்யா மேனன், இப்போது எல்லை மீறி நடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

விவாதங்கள்

விவாதங்கள்

தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வெப் சிரீஸ்களை பார்க்க நினைக்கும் குடும்பத்தினர்கள் இதுபோன்ற சிரீஸ்களை எப்படி பார்ப்பது? என்றும் இந்தக் காட்சிகளை இளைஞர்களை கெடுப்பதாகவும் சமூக வலைத் தளங்களில் கடுமையான விவாதங்கள் பரபரக்கின்றன. கேரளாவில் உள்ள சில இந்து அமைப்புகளும் நடிகை நித்யா மேனனுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

நடவடிக்கை

நடவடிக்கை

அந்த ஆபாச காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். திரைப்படங்கள் போன்று ஓடிடி தளத்திற்கு சென்சார் இல்லாததால் இளைஞர்களை ஈர்க்க, இதுபோன்ற காட்சிகளை வேண்டுமென்றே வைப்பதாகவும் இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X