பலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் ஹீரோயினின் மேக்கப் கலைஞர் போலீசில் புகார்
Recommended Video

திருவனந்தபுரம் : பிராணா படத்தில் நித்யா மேனனுக்கு மேக்கப் கலைஞராக உள்ள ஜூலியை சிலர் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடிகை நித்யா மேனனின் மேக்கப் கலைஞராக உள்ளார் ஜூலி. மெர்சல் படத்தில் கூட நித்யாவின் மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்தை அவர் தான் கவனித்துக் கொண்டார்.
வி.கே. பிரகாஷ் இயக்கத்தில் நித்யா நடித்து வரும் பிராணா படத்திலும் நித்யாவுக்கு ஜூலி தான் மேக்கப் போடுகிறார். இந்நிலையில் ஜூலி எர்ணாகுளம் ஐஜியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

நித்யா
நான் ‘பிராணா' படத்தில் நித்யா மேனனுக்கு மேக்கப் கலைஞராக உள்ளேன். கொச்சி அருகே உள்ள சலீம் வில்லாவில்(பங்களா) தங்கியிருந்தேன். கடந்த 15ம் தேதி படப்பிடிப்பு முடிந்து அறைக்கு திரும்பினேன். அப்போது என் அறை திறந்து கிடந்தது.

திருட்டு
அறையில் இந்த விலை உயர்ந்த மேக்கப் பொருட்கள் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பாக வில்லா உரிமையாளரிடம் கேட்டேன். சிறிது நேரம் கழித்து படத்தின் தயாரிப்பு நிர்வாகியான பாதுஷா உள்பட சிலர், அறைக்கு வந்து என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.

ஓட்டம்
நான் கூச்சல் போட்டதால் ஓடிவிட்டனர். அதன்பிறகு மேலும் சிலர் அங்கு வந்தனர். சம்பவம் குறித்து போலீசில் புகார் கூறக்கூடாது என்று மிரட்டினர். பின்னர் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி எர்ணாகுளத்தில் கொண்டு விட்டனர் என்று தெரிவித்துள்ளார் ஜூலி.

குடி
ஜூலியை பலாத்காரம் செய்ய யாரும் முயற்சி செய்யவில்லை. அவர் மது அருந்திவிட்டு போதையில் ரகளை செய்தார். அதனால் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அனுப்பினோம் என்று இயக்குனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











