நித்யா மேனன் நடிக்கும் "ஸ்கை லேப்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. வெளியிட்டார் தமன்னா!

சென்னை : ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் முதலில் சாய் பல்லவி நடித்து இருந்த கதாபாத்திரத்தில் இப்பொழுது நடிகை நித்யாமேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் நித்யா மேனன் 24,ஓகே கண்மணி ,மெர்சல் என தமிழில் பல ஹிட்டுகளை கொடுத்துள்ளார்.

இப்பொழுது நித்யா மேனன் நடிப்பில் தெலுங்கில் ஃபேண்டஸி கதை களத்தில் உருவாகி வரும் "ஸ்கை லேப்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார்.

இரு மொழிகளிலும்

இரு மொழிகளிலும்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சைக்கோ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை நித்யாமேனன் அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான தீனி படத்தில் நடித்திருந்தார். இதில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க ரிது வர்மா, நித்யா மேனன் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.

காட்டு பகுதிகளில்

காட்டு பகுதிகளில்

மலையாளம்,தமிழ்,தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ஹிட் படங்களை கொடுத்து மிகச் சிறந்த நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இவர் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் 19(1)(a) என்ற மலையாள படத்தில் நடித்துவருகிறார். முழுக்க முழுக்க காட்டு பகுதிகளில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது.

Recommended Video

அடுத்த Vijay Sethupathiயானு கலாய்ப்பாங்க | Actor Maari chat | Filmibeat Tamil
பவன் கல்யாணுக்கு ஜோடியாக

பவன் கல்யாணுக்கு ஜோடியாக

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதில் ராணா மற்றும் பவன் கல்யாண் லீட் ரோலில் நடிக்கின்றனர். பவன் கல்யாணுக்கு ஜோடியாக முதலில் சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் சில காரணங்களால் படத்திலிருந்து சாய்பல்லவி விலக இப்பொழுது நித்யா மேனன் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

 ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

இந்த நிலையில் இளம் நடிகர் சத்யதேவ் உடன் இணைந்து நித்யா மேனன் புதிய திரைப்படத்தில் நடிக்க "ஸ்கை லேப்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஷாக் கந்தேராவ் இயக்கி வருகிறார். ராகுல் ராமகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். "ஸ்கை லேப்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை தமன்னா இப்பொழுது வெளியிட்டிருக்கிறார். அதில் சாட்டிலைட்டின் மீது மூவரும் உட்கார்ந்து கொண்டு பறக்க ரூபாய் நோட்டுகள், தீ பிழம்பு என மிகவும் வித்தியாசமாக ஃபேண்டசி ஜானரில் உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X