என்ன அழகு.. மெழுகு பொம்மை போஸ் சிலிர்க்க வைக்கும் ஓகே கண்மணி!
சென்னை : நடிகை நித்யாமேனன் மெழுகு பொம்மை மாதிரி அம்சமாக உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதுவரை தென்னிந்தியாவில் கலக்கி வந்த நித்யாமேனன் மிஷன் மங்கள்யான் மூலம் இந்திப்பட துறையிலும் கால் தடத்தை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
விஜய் சேதுபதியுடன் இணைந்து முதல் முறையாக 19(1a) என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நித்யா மேனன் இப்பொழுது சோபாவில் மெழுகு பொம்மை போல அம்சமாக உட்கார்ந்துகொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வர்ணிக்க வைத்துள்ளது.

மிஷன் மங்கள்யான்
நடிகர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறதோ அதே போல சில முன்னணி கதாநாயகிகளுக்கும் இருக்கிறது. இதில் நித்யா மேனனுக்கு கொஞ்சம் கூடுதலாகவே பல மொழிகளில் இருக்கின்றது. கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து வரும் இவருக்கு இப்பொழுது பாலிவுட் திரைத்துறையும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க 2019ஆம் ஆண்டு வெளியான மிஷன் மங்கள்யான் மூலம் இந்திப்பட துறையிலும் கால் தடத்தை பதித்துள்ளார்.

ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமை வாய்ந்த நடிகையான இவர் தமிழ் ரசிகர்களுக்கு 180 மற்றும் வெப்பம் ஆகிய திரைப்படங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். தெலுங்கில் வெளியான இஷ்க், அலா மொதலாய்ந்தி திரைப்படம் இவருக்கு வேற லெவலில் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.

விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு
தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு, ஹிந்தி,இங்கிலீஷ் என பல மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடிய நித்யா மேனன் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ரொமான்டிக் காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்க இளைஞர்களால் மிகவும் கவரப்பட்ட இவருக்கு விஜய்யுடன் இணைந்து மெர்சல் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்க அதிலும் நடிப்பில் தூள் கிளப்பி இருந்தார்.

வித்தியாசமான கதையில்
சவாலான கதாபாத்திரங்களையும் அசால்டாக செய்து காட்டி அதில் பாராட்டுக்களையும் பெறும் நித்யா மேனனுக்கு ஓகே கண்மணி மற்றும் மெர்சல் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நாயகிக்கான விருதுகள் வழங்கப்பட்டது. இந்திய சினிமாவில் இப்பொழுது கலக்கி வரும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து 19(1a) என்ற வித்தியாசமான கதையில் நடித்து வரும் நித்யா மேனன் இதன் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

மெழுகு பொம்மை மாதிரி
கவர்ச்சி காட்டாமலேயே சிறந்த நடிகையாக வலம் வர முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கும் நித்யாமேனன் மெழுகு பொம்மை போல சோபாவில் மீது அழகாக உட்கார்ந்துகொண்டு சுருள்முடி பால் போன்ற முகம் அசர வைக்கும் அழகு என மெழுகு பொம்மை மாதிரியே அழகாக போஸ் கொடுத்திருக்கும் நித்யாமேனனின் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் வர்ணித்து வர நடிகை அனுபமா பரமேஸ்வரன் இந்த போட்டோவில் நீங்கள் கொள்ளை அழகில் இருக்கின்றீர்கள் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











