விஜய் சேதுபதியுடன் நடுக்காட்டில் நித்யாமேனன்.. பரபரப்பான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

சென்னை : தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

எதார்த்தமாக நடிக்க கூடிய திறன் கொண்ட விஜய்சேதுபதியின் திரைப்படங்கள் இந்திய அளவில் மார்க்கெட்டை கொண்டிருக்கும் நிலையில் இவரது திரைப்படங்கள் இப்பொழுது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகின்றன.

இந்த நிலையில் இப்போது நித்யா மேனனுடன் விஜய்சேதுபதி நடுகாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பாக உள்ள நிலையில் இதை நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வட்டமிடும் பல திரைப்படங்கள்

வட்டமிடும் பல திரைப்படங்கள்

மலையாள நடிகை நித்யா மேனன் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர், தனது இயல்பான நடிப்பை வெளிக்கொண்டு வந்து துடிப்புடன் திரையில் இவர் வட்டமிடும் பல திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

நித்யா மேனன் செய்த ரொமான்ஸ்

நித்யா மேனன் செய்த ரொமான்ஸ்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஓ காதல் கண்மணி திரைப்படம் இன்று வரை காதலர்களின் மனதிற்கு நெருக்கமான திரைப்படங்களில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் அதில் துல்கர் சல்மானுடன் இணைந்து நித்யா மேனன் செய்த ரொமான்ஸ் பார்ப்போர் அனைவரையும் செம க்யூட் கப்புள் என சொல்ல வைத்தது.

விஜய் சேதுபதியுடன் பணியாற்றி

விஜய் சேதுபதியுடன் பணியாற்றி

மெர்சல், சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மலையாளம் மற்றும் தெலுங்கில் இவர் நடித்து வரும் பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராக உள்ள நிலையில் இப்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றிலும் பணியாற்றி வருகிறார்.

19 (1)(a) படத்தில்

19 (1)(a) படத்தில்

விஜய் சேதுபதி தமிழில் இப்பொழுது உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அதே சமயம் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வர இப்போது நித்யா மேனன் நடித்தவரும் 19 (1)(a) படத்தில் நடித்து வருகிறார்.

ஷாட் வந்தா பாத்துக்கலாம்

ஷாட் வந்தா பாத்துக்கலாம்

19 (1)(a) திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது கேரள வனப்பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்க இதில் நித்யா மேனன் தான் நடித்த காட்சியை கேமராவில் சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருக்க சேதுபதி நம்ம ஷாட் வந்தா பாத்துக்கலாம் என செம கூலாக ஃபோனை நோண்டிக்கொண்டு படப்பிடிப்பில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இப்பொழுது பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X