பல நடிகைகள் ஏங்கிக் கிடக்க நித்யா மேனனுக்கு அடித்த ஜாக்பாட்?
Recommended Video

ஹைதராபாத்: நித்யா மேனனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகுபலி 2 படத்தை அடுத்து எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா என்று இரண்டு ஹீரோக்கள். இதில் ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார்.
இந்த படத்திற்காக ஆலியா தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறார்.

நடிகை
படப்பிடிப்பை துவங்கி நீண்ட நாட்கள் கழித்து தான் ராஜமவுலி ஹீரோயின்களை தேர்வு செய்தார். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

நல்ல படம்
ஆர்.ஆர். ஆர். படத்தில் இருந்து வெளியேறிய டெய்சி எட்கர் ஜோன்ஸை தெலுங்கு ரசிகர்கள் பயங்கரமாக கலாய்த்தனர். இப்படி ஒரு பட வாய்ப்பு இந்த ஜென்மத்தில் கிடைக்காது. பல நடிகைகள் ராஜமவுலி படத்தில் நடிக்க ஏங்கிக் கிடக்கும் போது உங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பை வீணடித்துவிட்டீர்கள் என்று டோலிவுட் ரசிகர்கள் டெய்சியை விளாசினார்கள்.

நித்யா மேனன்
டெய்சிக்கு பதில் நடிக்குமாறு நித்யா மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம் ராஜமவுலி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நச்சென்று நடித்துக் கொடுப்பார் நித்யா. இந்நிலையில் ராஜமவுலியின் மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

சபாஷ்
ஆலியா பட் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுவார். நித்யா மேனனும் அப்படித் தான். அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் பட்சத்தில் செம போட்டியாக இருக்கும். ஆர். ஆர். ஆர். படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











