சாய்பல்லவி நிராகரித்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான நித்யாமேனன்!
சென்னை : நடிகை சாய் பல்லவி நடிக்க இருந்த பிரபல திரைப்படத்தில் அவருக்கு பதிலாக நடிகை நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஓகே கண்மணி, மெர்சல், 24, இருமுகன், சைக்கோ என தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருந்த படத்தில் இருந்து திடீரென விலகியதால் அந்த கதாபாத்திரத்திற்கு நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ரீமேக் உரிமையை
மலையாளத்தில் சென்ற ஆண்டு வெளியான ஐயப்பனும் கோஷியும் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்த நிலையில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளியது. படம் வெளியானது முதலே ரீமேக் உரிமையை வாங்க பல மொழிகளில் இருந்தும் போட்டிப்போட்டு கொண்டு இருக்க எப்பொழுது தெலுங்கில் உருவாகிறது.

தெலுங்கு ரீமேக்கில்
இயக்குனர் சச்சி இயக்கிய ஐயப்பனும் கோஷியும் படத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்க மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரித்விராஜின் கதாபாத்திரத்தில் ராணாவும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல்
இந்த நிலையில் இதில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த படத்தில் இருந்து சாய்பல்லவி விலகியதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. ஒப்பந்தமான பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்த படத்திற்கு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல்கள் இருப்பதால் இந்த படத்தில் இருந்து விலகினார் என கூறப்பட்டது.

முதல்முறையாக ஜோடியாக
இந்த நிலையில் சாய் பல்லவி நடிக்க இருந்து பின் விலகிய இந்த கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை நித்யா மேனன் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்கனவே மிகவும் பரிச்சயமானவர் மேலும் பவன் கல்யாணுக்கு முதல்முறையாக ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை சூர்யா தேவர நாகவம்சி தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











