Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அட..நித்யா மேனனுக்கு திருமணமா?..மாப்பிள்ளை யார் தெரியுமா?
சென்னை : பிரபல நடிகை நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, இருமுகம், மெர்சல் போன்ற தமிழ் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் நடிகை நித்யா மேனன்.
தமிழில் நடிகர் விஜய், விக்ரம், சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நடிகர் நானி, அல்லு அர்ஜுன், மலையாளத்தில் பெரும்பாலான கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நித்யா மேனன்.
ராஷி கண்ணா.. பிரியா பவானி சங்கர்.. இப்போ நித்யா மேனன்.. அடுத்தது யாரு.. காத்திருக்கும் ரசிகர்கள்!

நித்யா மேனன்
நித்யா மேனன் துல்கர் சர்மா இணைந்து நடித்த ஓ காதல் கண்மணி படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி பக்காவாக இருக்கும் இந்த படத்திலிருந்து நித்யா மேனனுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது. முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்திருந்தாலும், பிற்பகுதியில் பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவே நடித்து வருகிறார். இரண்டாவது கதாநாயகியாக இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் தனக்குத் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக
குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நித்யா மேனன். 17 வயதில் நடிகையாக துணை கதாபாத்திரத்தில் ஒரு கன்னடப் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு கதாநாயகியாக மலையாளத்தில் ஆகாச கோபுரம் என்ற படத்திலும், தமிழில் 180 படத்திலும் தனது அறிமுகத்தை கொடுத்தார். இதையடுத்து, தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் இருக்கும் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

திருச்சிற்றம்பலம்
தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆறாம் திருகல்பனா படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. ஹைதராபாத் மார்டன் லவ் என்ற அந்தாலஜி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து அவர் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இதனால் அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

விரைவில் திருமணம்
நடிகை நித்யா மேனன், பிரபல மலையாள ஹீரோ ஒருவரைக் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி நித்யா மேனன் அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.