twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் பேரரசுக்கு கைலாச தர்ம ரட்சகா விருது..ஆதரவாக என்றும் நான் இருப்பேன்..நித்தியானந்தா பேச்சு!

    |

    பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் நித்யானந்தா, இயக்குனர் பேரரசு அவர்களுக்கு கைலாச தர்ம ரட்சகா விருதினை வழங்கியுள்ளார்.

    திருவண்ணாமலையில் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கிய நித்யானந்தா உலகம் முழுவதும் தனது கிளையை பரப்பினார்.

    நித்யானாந்தவின் பேச்சால் மயங்கி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆசிரமத்திலேயே தங்க தொடங்கினர். இதனால் பல இடங்களிலும் பாலியல் சர்ச்சைகளும் ஆரம்பித்தன.

    நித்யானந்தா மீது எனக்கு கிரஷ்..திருமணம் செய்ய ஆசை..நடிகை பிரியா ஆனந்தின் விபரீத பேட்டி!நித்யானந்தா மீது எனக்கு கிரஷ்..திருமணம் செய்ய ஆசை..நடிகை பிரியா ஆனந்தின் விபரீத பேட்டி!

    நித்தியானந்தா

    நித்தியானந்தா

    பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என இந்தியாவின் பல இடங்களில் நித்யானந்த மீது வழக்குகள் குவிந்தன. இதனால், பல வழக்குகளில் சிக்கிய நித்யானந்தா, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சீடர்களுடன் தலைமறைவாகி தனித் தீவு ஒன்றில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கினார்.

    கைலாசா தனி நாடு

    கைலாசா தனி நாடு

    கைலாசா என்ற நாட்டை அறிவித்தாலும் இதுவரை கைலாசா எங்கிருக்கின்றது, என்பதையும் அங்கு அவர் வாழும் வாழ்வியல் முறை பற்றியும் எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை. ஆனால், அந்த இடத்தில் இருந்து தினந்தோறும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். சமீபத்தில் நித்தியானந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக செய்திகளும் இணையத்தில் பரவின.

    இயக்குநர் பேரரசுக்கு விருது

    இயக்குநர் பேரரசுக்கு விருது

    இந்நிலையில், நித்தியானந்த இயக்குநர் பேரரசுக்கு கைலாச தர்ம ரட்சகா விருதினை வழங்குவதாக ஒரு வீடியோவில் பேசிஉள்ளார். அந்த வீடியோவில், திரு பேரரசு பற்றி சொல்லவே வேண்டியது இல்லை, திருவண்ணாமலை என்ற பெயரிலேயே ஒரு மிகப்பெரிய படத்தை கொடுத்து இருக்கிறார். உங்களுடைய இந்து மத பற்றும், இந்த மதத்திற்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதும், இந்து மதத்திற்காக களம் காணுவதும், நீங்கள் செய்யும் மிகப்பெரிய பணியை நான் நன்கு அறிவேன்.

    தர்ம ரட்சகா விருது

    தர்ம ரட்சகா விருது

    உங்களுடைய அனைத்து திரைப்படங்களின் தலைப்புகளுமே, ஆன்மிக பெயர்கள், ஆன்மிக ஸ்தளங்களின் பெயர்களாகத்தான் இருக்கும், சிவகாசி, திருவண்ணாமலை, பழனி, திருப்பதி. உங்களுடைய இந்து மதப்பணி, மிகப்பெரும் பணி அதற்காக தலைவணங்குகின்றேன். உங்களோடு என்றும், என்றென்றும் தோள் கொடுத்து நிற்பேன். நானும், கைசாலமும் நீங்கள் செய்யும் இந்து மதப்பணிகளுக்கு என்றென்னும் உறுதுணையாக இருப்போம் என்ற பேசியுள்ளார்.

    English summary
    Nithyananda presented the kailasa Dharma rakshaka award to Director Perarasu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X