twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுவாமி சத்யானந்தா படத்தை வெளியிட தடை கோரி நித்யானந்தா வழக்கு!

    By Shankar
    |

    Sathyananda Movie
    ஹைதராபாத்: தன்னை விமர்சிக்கும் வகையில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் சுவாமி சத்தியானந்தா என்ற கன்னட - தெலுங்கு படத்தை தடை செய்யுமாறு நித்தியானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

    நித்தியானந்தா சார்பில் அவரது வக்கீல், ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், "நித்தியானந்தாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு கன்னடத்தில் 'சுவாமி சத்தியானந்தா என்ற பெயரில் சினிமா படம் தயாரிக்கப்பட்டு அது தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த மொழி மாற்று படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

    அந்தப் படத்தில் நித்தியானந்தாவை தவறாக சித்தரித்து இருப்பது அவருடைய பக்தர்களின் மனதை புண்படுத்துவது போல் உள்ளது என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    அந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    English summary
    Nithyananda has filed a petition in Andhra High court seeking ban on a movie shot based his real life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X