Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முதலில் ரஜினி.. இப்போ நித்யானந்தா.. முரட்டு சிங்கிளால் பிரச்சினையில் சிக்கிய யோகி பாபு !
சென்னை: யோகி பாபு நடிக்கும் பப்பி திரைப்படத்துக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சாமியார் நித்யானந்தா.
அறிமுக நாயகன் வருணுடன் இணைந்து யோகி பாபு நடிக்கும் படம் பப்பி. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை முரட்டு சிங்கிள் என்பவர் இயக்குகிறார்.
பப்பி படத்தில் பர்ஸ்ட் போஸ்டரை நடிகர் ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் வெளியிட்டார். அதில் ஒரு பக்கத்தில் நித்யானந்தாவின் படமும், இன்னொரு பக்கத்தில் அமெரிக்க ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் என்பவரின்
புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

நித்யானந்தா எதிர்ப்பு
இந்த போஸ்டருக்கு நித்யானந்தா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நித்யானந்தா சார்பில் படக்குழுவினருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நற்பெயருக்கு கலங்கம்
அந்த நோட்டீசில், "நித்யானந்தாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் படக்குழுவினர் செயல்பட்டுள்ளதாகவும், அவரது அனுமதியின்றி அவரின் புகைப்படத்தை விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பப்பி படக்குழுவினர் மீது சிவசேனா சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோமாளி சர்ச்சை
ஜெயம் ரவியுடன் இணைந்து யோகி பாபு நடித்த கோமாளி படமும் இப்படி தான் சர்ச்சையில் சிக்கியது. அந்த படத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்யும் வகையில் வைக்கப்பட்டிருந்த காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன.

தயாரிப்பாளர்
கோமாளி படத்தை தயாரித்ததும் ஐசரி கணேஷ் தான். அதேபோல் பப்பி படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான். இதற்கு முன் அவர் தயாரித்த எல்கேஜி படமும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.