இப்பவே என்னா ஆட்டம்... விஜய் வில்லனின் ஒன்றரை வயது மகள் டான்ஸ்... வைரலாகும் வீடியோ.
சென்னை: விஜய் பட வில்லன் நடிகரின் மகள் ஆடும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் பாடகரும் கூட. இந்தியில் ஜானி கட்டார், நியூயார்க், ஜெயில், ஷார்ட்கட் ரோமியோ, வாஸிர், கோல்மால் எகைன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சில தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான பிரபாஸின் சாகோ படத்திலும் நடித்திருந்தார். இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் நுர்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தை வீட்டில் கண்ணாடி முன் நின்று நடனம் ஆடுகிறது. நிர்வி, ஸ்டைலாக ஆடும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நீல் நிதின் முகேஷ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications