சாரா தான் கஞ்சா கொடுத்தார்.. ரியா சக்கரவர்த்தி பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் 'மகாபாரத’நடிகர்!
மும்பை: சைஃப் அலி கானின் மகளும் பாலிவுட்டின் இளம் நடிகையுமான சாரா அலி கான் தான் தனக்கு கஞ்சா மற்றும் வோட்காவை கொடுத்தார் என நடிகை ரியா சக்கரவர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் நிதிஷ் பரத்வாஜ் அளித்துள்ள பேட்டி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
டிடியில் ஒளிபரப்பான பழைய மகாபாரத தொடரில் 'ஸ்ரீ கிருஷ்ணர்' கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் இவர்.

கஞ்சா கொடுத்தார்
நடிகை சாரா அலி கான் தான் தனக்கு கஞ்சா மற்றும் வோட்கா கொடுத்து பழக்கினார். மேலும், போதைப் பொருள் பழக்கம் கொண்டவர் சாரா அலி கான் என சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ஓராண்டு ஆகிறது
எம்.எஸ். தோனி பயோபிக், சிச்சோரே உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக விசாரணை நடைபெற்று வருகிறது. சுஷாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பல பிரபலங்கள் அவரது நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.

நிதிஷ் பரத்வாஜ்
சுஷாந்த் சிங் ராஜ்புத், சாரா அலி கான் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மூத்த நடிகர் நிதிஷ் பரத்வாஜ், தற்போது ரியா சக்கரவர்த்தி நடிகை சாரா அலி கான் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாக பேசியுள்ளது பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

அப்படிப்பட்டவர்கள் அல்ல
சாரா அலி கானும் நடிகர் சுஷாந்த் சிங்கும் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள் அல்ல என பிரபல நடிகர் நிதிஷ் பரத்வாஜ் கூறியிருப்பது ரியாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ளது. இருவரது கண்களும் எப்போதுமே ஃபிரெஷ்ஷாகவே இருக்கும் என்றும், சுஷாந்த் ரொம்பவே சுறுசுறுப்பாக சிந்திக்கக் கூடியவர். போதைப் பொருள் பயன்படுத்துபவர்களால் அப்படி சுறுசுறுப்பாக சிந்திக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

நட்சத்திரங்களை பற்றி
அவர் எப்போதுமே, என்னிடம் நட்சத்திரங்களையும் விண்வெளியையும் பற்றியே அதிகளவில் பேசுவார். வேற்று கிரகங்கள், வானம் என்றே உயர்ந்த எண்ணங்களை கொண்ட நபர் இப்படி தற்கொலை செய்து கொண்டு இறப்பார் என நினைக்கவே இல்லை. கடைசியாக அவர் இறப்பதற்கு 32 மணி நேரத்திற்கு முன்னதாகவும் அவரிடம் மெசேஜில் பேசினேன், அப்போதும் வீட்டுக்கு வாங்க என்றே கூறியிருந்தார் என்றும் நிதிஷ் பரத்வாஜ் கூறியுள்ளார்.

மகாபாரத கிருஷ்ணர்
1988ம் ஆண்டு ஒளிபரப்பான மகாபாரதம் நெடுந்தொடரில் கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமானவர் நிதிஷ் பரத்வாஜ். 58 வயதாகும் நிதிஷ் பரத்வாஜ் கடைசியாக 2018ல் வெளியான கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சாரா அலி கான் உடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











