பிகினி உடை போட்டோ.. தவறான புகைப்படம் பரவியதால் கொந்தளித்த நிவேதா பெத்துராஜ்!

By Vignesh Selvaraj

Recommended Video

பயங்கர கிளாமராகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மதுரை பொண்ணு- வீடியோ

சென்னை : 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது 'டிக் டிக் டிக்', 'பார்ட்டி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நிவேதா பெத்துராஜ் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், இது நிவேதா பெத்துராஜ் அல்ல.

சில ஊடகங்கள் வேறொரு நடிகையின் புகைப்படத்தை தனது புகைப்படம் என தவறான தகவலை பரப்பி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ்

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமிழ்ப் பெண்ணான நிவேதா பெத்துராஜ். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக 'பொதுவாக எம் மனசு தங்கம்' படத்தில் நடித்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கும் 'பார்ட்டி' படத்திலும் நடித்துள்ளார்.

டிக் டிக் டிக்

டிக் டிக் டிக்

ஸ்பேஸ் படமான 'டிக் டிக் டிக்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ஜோடியாக 'திமிரு பிடிச்சவன்', விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக 'ஜகஜால கில்லாடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

சமீபத்தில், நிவேதா பெத்துராஜ் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலானது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஹோம்லியாக நடிக்கும் நிவேதாவா இப்படி என அதிர்ச்சியாகினர்.

இவர் அல்ல

ஆனால், உண்மையில் அந்தப் படத்தில் இருந்தது நிவேதா இல்லை. அந்தப் படத்தில் இருப்பது ஹிரிட்டு எனும் பாலிவுட் மாடல். இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைத்தான் சில ரசிகர்கள் நிவேதா பெத்துராஜ் எனப் பரப்பியுள்ளனர்.

மீண்டும் சர்ச்சை

இந்நிலையில், மீண்டும் நிவேதா பெத்துராஜ் பிகினி புகைப்படங்கள் என சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இது வர்ஷினி பாகல் எனும் மாடல் நடிகை. இவர் பார்ப்பதற்கு நிவேதா போலவே இருப்பதால் இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது.

கோபம்

"ஒரு சில ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வேறொருவரின் புகைப்படத்தை என் புகைப்படம் எனக் கூறி பொய்யாக பரப்புரை செய்கின்றனர். ஊடகங்கள் மீது எனக்கு நல்ல மரியாதை இருப்பதால் தான் அமைதியாக இருக்கிறேன்.

எங்களுக்கும் குடும்பம் உண்டு

எங்களுக்கும் குடும்பம் உண்டு

இதே நிலை தொடர்ந்தால், எனது சட்ட ஆலோசகர் கூறும்படி நடவடிக்கை எடுப்பேன். நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. சமுதாயத்தில் இது எனக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது போல நடந்தால் சட்ட நடவடிக்கை தான் ஒரே தீர்வு" எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X