'இதுதான் ஒரிஜினல், இதையே ஃபாலோ பண்ணுங்க.. மத்ததெல்லாம் போலி கணக்கு..' பிரபல நடிகை திடீர் விளக்கம்
சென்னை: தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் இருப்பதாகவும் அதை ரசிகர்கள் பின் தொடர வேண்டாம் என்றும் பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார்.

திமிரு பிடிச்சவன்
பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார். அடுத்து ஜெயம் ரவி ஜோடியாக, டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. பின்னர் விஜய் ஆண்டனி ஜோடியாக, 'திமிரு பிடிச்சவன்', விஜய் சேதுபதி ஜோடியாக, சங்கத்தமிழன், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அலா வைகுந்தபுரம்லோ
தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். சமீபத்தில் சூப்பர் ஹிட்டான அல்லு அர்ஜுனின், அலா வைகுந்தபுரம்லோ படத்தில் நடித்திருந்தார். இப்போது தமிழில் ஹிட்டான 'தடம்' படத்தின் ரீமேக்கான 'ரெட்'டில் நடித்துள்ளார். இவர், தனது பெயரில் ட்விட்டரில் போலி கணக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

போலி கணக்குகள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'ட்விட்டரில் @nivetha_tweets என்ற கணக்கை மட்டுமே நான் நிர்வகிக்கிறேன். என் பெயரில் பல போலி ட்விட்டர் கணக்குகள் இருப்பதால் இதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த போலி கணக்குகளை, நீக்குவதற்கு ட்விட்டர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் எனது இந்த கணக்கை மட்டும் பின் தொடருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

பல நடிகைகள்
பிரபலங்களின் பெயரில் போலி டிவிட்டர் கணக்குகள் தொடங்குவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே பல நடிகைகள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் தவறான தகவல்களையும் சிலர் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் பெயரில் இப்படி போலி கணக்குகளை உருவாக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











