சாப்பாட்டில் கரப்பான் பூச்சி: நிவேதா பெத்துராஜ் புகார் எதிரொலி.. பிரபல ஹோட்டலுக்கு தற்காலிக தடை!

சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் எதிரொலியாக பிரபல ஹோட்டலுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Nivedha Pethuraj புகாரால் Restaurantற்கு Seal வைத்த உணவு பாதுகாப்புத்துறை

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ்.

இவர் நேற்று முன்தினம் சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் ஸ்விக்கி மூலம் ஃபிரைட் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார்.

அவசர ஆபரேஷன்.. இதய பிரச்சனையால் போராடும் 2 வயது சிறுவன் தேவனேஷி.. சீக்கிரம் உதவுங்களேன்!

கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சி

சாப்பிட ஃபிரைட் ரைஸை திறந்த நிவேதா பெத்துராஜ் அதில் கரப்பான் பூச்சி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து தான் வாங்கிய சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருக்கும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார்.

இது முதல் முறையல்ல

இது முதல் முறையல்ல

ஹோட்டல் குறித்த தகவல்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். மேலும் இந்த ஹோட்டல் சாப்பாட்டில் கரப்பான் பூச்சி கிடப்பது ஒன்றும் இது முதல் முறையல்ல என்றும் குற்றம் சாட்டியிருந்தார் நிவேதா பெத்துராஜ்.

உணவு பாதுகாப்புத்துறை

உணவு பாதுகாப்புத்துறை

நிவேதா பெத்துராஜ் கரப்பான் பூச்சியுடன் ஷேர் செய்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இந்நிலையில் அவரது புகாரின் அடிப்படையில், உணவு சப்ளை செய்த மூன்லைட் ஓட்டல் செயல்படுவதற்கு தற்காலிகமாக தடை விதித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பழைய இறைச்சி

பழைய இறைச்சி

மேலும் 3 நாட்களுக்குள் உணவகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் மூன் லைட் ஹோட்டலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு ஹோட்டலில் இருந்த 10 கிலோ பழைய இறைச்சியை பறிமுதல் செய்து அழித்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X