மீண்டும் காக்கிச் சட்டை… டோலிவுட் பக்கம் திரும்பிய நிவேதா பெத்துராஜ்!

மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் காவல் அதிகாரியாக நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஐதராபாத்: ஒருநாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து ஜெயம் ரவியின் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படங்களில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் இவர் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வெற்றி

வெற்றி

என்னை அறிந்தால், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் மீண்டும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்த அருண் விஜய்யின் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான தடம் படம் மாபெரும் வெற்றியை தேடித் தந்தது. இந்த படத்தை இயக்கிய மகிழ்த்திருமேனிக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

மார்க்கெட் சரிவு

மார்க்கெட் சரிவு

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. இப்போதைக்கு விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதனால், தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

மீண்டும் காக்கிச்சட்டை

மீண்டும் காக்கிச்சட்டை

டிக் டிக் டிக் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்த நிவேதா பெத்துராஜ், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிரு புடிச்சவன் படத்தில் காக்கிச்சட்டை அணிந்த பெண் போலீசாக அசத்தியிருந்தார். தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள நிவேதா பெத்துராஜ், தமிழில் வித்யா நடித்திருந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குநர் கிஷோர் திருமலா இயக்குகிறார். இந்த படத்தில் சமீபத்தில் 'ஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக மாறியுள்ள ராம் பொத்தினேனி நடிக்கிறார். தமிழில் ஹிட்டானது போலவே தெலுங்கிலும் இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X