டிக்டிக்டிக்கில் ராக்கெட்டே ஓட்டியாச்சு.. இது வெறும் கார் தானே.. புது டிராக்கில் நிவேதா பெத்துராஜ்!

சென்னை: தல அஜித் போல திடீரென ரேஸ் கார் பக்கம் டிராக்கை திருப்பி இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

போல்டான கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் நிவேதா பெத்துராஜின் இந்த லேட்டஸ்ட் கார் ஓட்டும் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

நிவேதா பெத்துராஜின் இந்த புதிய பேஷனை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

போல்டான நடிகை

போல்டான நடிகை

டிக்டிக்டிக், ஒருநாள் கூத்து, திமிரு புடிச்சவன், அலா வைகுந்தபுரமுலோ என ஏகப்பட்ட படங்களில் நடித்து கலக்கி வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். போலீஸ் அதிகாரி, விண்வெளி வீராங்கனை என போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்.

லேடி தல

லேடி தல

இந்நிலையில், தற்போது திடீரென ரேஸ் கார் ஓட்டும் பயிற்சியில் நடிகை நிவேதா பெத்துராஜ் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. கோலிவுட் ரசிகர்கள் பலரும் இவரை லேடி தல என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

என்ன திடீர்னு

என்ன திடீர்னு

தமிழ் பொண்ணான நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், திடீரென இப்படி F1 கார் ரேசர் அவதாரம் எடுத்து இருக்கிறாரே, ஏதாவது புதிய படத்திற்காகவா என ரசிகர்கள் சந்தேகிக்க, தனது இன்னொரு பக்கம், இன்னொரு வாழ்க்கை என அவரே போட்டோக்களை ஷேர் செய்து ரேஸ் கார் ஓட்டுவது மீதான தனது ஆர்வத்தை அவரே தெரிவித்துள்ளார்.

கைவசம்

கைவசம்

தமிழில் பிரபுதேவா உடன் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் விரைவில் ஒடிடியில் ரிலீசாக உள்ளது. தெலுங்கில் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ரெட், விராட பர்வம், அக்டோபர் 31 லேடிஸ் நைட், பகல் என ஏகப்பட்ட படங்களை கைவசம் கொண்டுள்ளார்.

குவிகிறது பாராட்டு

குவிகிறது பாராட்டு

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்னொரு முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ள நிலையில், டிக்டிக்டிக் படத்தில் ராக்கெட்டையே ஓட்டிட்டீங்க, இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி தான் என கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர். உங்களுக்கு பிடித்த விஷயங்களை எந்தவொரு சூழ்நிலையிலும் விட்டு விடாதீர்கள் என்றும் நிவேதாவை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X