நெத்தியில் குங்குமம்… சாதாரண புடவையில் செல்ஃபி…. நிவேதா பெத்துராஜின் க்யூட் பிக்ஸ் !
சென்னை : தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
ஊரங்கு நேரத்தில் வீட்டில் ஒய்வு எடுத்து வரும் இவர், நெத்தியில் குங்குமம் வெச்சி புடவையில் ஒரு சூப்பரான செல்ஃபி எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதற்கும் வழக்கம் போல அவரின் தீவிர ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

கதைகளுக்கு முக்கியம்
ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்

வசூல் சாதனை
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பட்டையை கிளப்புகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தார் நிவேதா பெத்துராஜ்.

பார்ட்டி படத்தில் கவர்ச்சி
தமிழில் ஜகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் நிவேதாவுக்கு வெளியாக உள்ளன. இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிவேதா பார்ட்டி படத்தில் பிகினியில் வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த படத்திலிருந்து ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அதில் நிவேதா அரைகுறை ஆடையில் அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார்.

சாதாரண புடவையில் செல்ஃபி
படங்களில படு பிஸியாக நடித்து வந்த நிவேதா, கொரோனா ஊரடங்கால் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர்,நெத்தியில் குங்குமம் வச்சு புடவையில் ஒரு க்யூட்டான செல்ஃபியை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு வழக்கம் போல இவரின் தீவிர ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











