Nivetha Pethuraj - மணிரத்னம் அப்படி சிரித்து பார்க்கவில்லை.. எல்லாத்துக்கும் நானே காரணம்..சீக்ரெட் சொன்ன நடிகை

சென்னை: Nivetha Pethuraj (நிவேதா பெத்துராஜ்) பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்திற்கான ஆடிஷன் போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. மேலும் 500 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலித்தது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

Nivetha Pethuraj Talks about Maniratnam And Ponniyin Selvan Movie Auditon

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்: அருண்மொழி சோழனை நீரிலிருந்து ஊமை ராணி காப்பாற்றும்படி தொடங்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தில் இருந்த சின்ன சின்ன குறைகளை மணிரத்னம் நிச்சயம் இரண்டாம் பாகத்தில் தீர்த்திருப்பார். படம் பெரும் வசூல் வேட்டை நடத்தும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்றனர்.

ரசிகரக்ள் ஏமாற்றம்: ஆனால் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பொன்னியின் செல்வன் 2வில் மணிரத்னம் தவறிவிட்டார்.. குறிப்பாக பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுவதாக கல்கி எழுதியிருப்பார். ஆனால் படத்திலோ ஆதித்ய கரிகாலன் தற்கொலை செய்துகொள்வது போல் மணிரத்னம் காட்சிப்படுத்தியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. விமர்சனங்கள் பல எழுந்தாலும் இரண்டு பாகங்கள்லும் நல்ல வசூலை ஈட்டிவிட்டதாகவே கூறப்படுகிறது.

Nivetha Pethuraj Talks about Maniratnam And Ponniyin Selvan Movie Auditon

பூங்குழலி: பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரம் ரொம்பவே ஃபேமஸ் ஆனது. எழுத்தாளர் கல்கி தன்னுடைய நாவலில் பூங்குழலியை கற்பனையாக உருவாக்கினார். நாவலை படிக்கும்போதே அந்த கதாபாத்திரம் ரொம்பவே வாசகர்களுக்கு பிடித்திருந்தது. அதேபோல் படத்திலும் பூங்குழலி கதாபாத்திரம் சிறப்பாகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அந்தக் கதாபாத்திரல் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

நிவேதா பெத்துராஜ்: இந்நிலையில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜை மணிரத்னம் ஆடிஷன் செய்த விஷயம் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய நிவேதா, "பொன்னியின் செல்வன் பூங்குழலி கதாபாத்திரத்துக்கு என்னை முதலில் ஆடிஷன் செய்தார்கள். முதலில் என்னிடம் ஸ்க்ரிப்ட்டை கொடுத்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அதை படித்தேன். பிறகு வசனத்தை 20 நிமிடங்கள்வரை மனப்பாடம் செய்தேன்.

பயங்கரமாக சிரித்த மணிரத்னம்: அதன் பின் மணிரத்னத்தின் உதவி இயக்குநர் வந்து ரெடியா என்று கேட்டார். நான் தயார் ஆனேன். அந்த சமயத்தில் மணிரத்னம் சாரும் வந்துவிட்டார். வந்தவர் என்னிடம் 'மன்னிச்சுடுங்க' என்று வசனம் சொல்ல சொன்னார். நான் உடனே ஆங்கிலத்தில் ஐ அம் சாரி என்று சொல்லிவிட்டேன். உடனே மணிரத்னம் சார் அவ்வளவு சத்தமாக சிரித்தார்.

இதுவரை அவர் அப்படி சிரித்து நான் பார்த்ததே இல்லை. எனக்கு ரொம்பவே பதற்றமாகிவிட்டது. நான் அவரிடம் சார் என்னை ஆடிஷன் செய்யாதீர்கள். எங்கேயாவது கூட்டத்தில் ஓரமாக நிற்க வையுங்கள் போதும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்" என்றார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X