பி.வி. சிந்துலாம் பின்னாடி போங்க.. பேட்மிண்டன் விளையாட்டில் கோப்பை வென்ற நிவேதா பெத்துராஜ்!
சென்னை: நடிகர் அஜித் மாதிரி கார் ரேஸ் ஓட்டுகிறார். திடீரென பி.வி. சிந்து மாதிரி பேட்மிண்டன் விளையாட்டில் மாஸ் காட்டுகிறாரே என நடிகை நிவேதா பெத்துராஜை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சினிமா ஹீரோயின்கள் படங்களிலேயே சரியாக பயன்படுத்தப்படுவது இல்லை என்கிற விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், சினிமாவை தாண்டியும் பல சாதனைகளை செய்து வருகிறார் டிக் டிக் டிக் நடிகை நிவேதா பெத்துராஜ்.
கடந்த 2016ல் வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் நடிகை நிவேதா பெத்துராஜ் சினிமாவில் அறிமுகமானார். பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்த அவருக்கு தெலுங்கில் மெண்டல் மதிலோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன், அல்லு அர்ஜுன் நடித்த அலா வைகுந்தபுரமுலோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

போல்டான நடிகை: ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் விண்வெளி வீராங்கனையாக போல்டான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் நிவேதா பெத்துராஜ். திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து தேர்வு செய்யும் படங்களில் போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

கார் ரேஸ்: நடிகர் அஜித் போல கார் ரேஸில் கலந்து கொள்ளும் போட்டோக்களையும் வீடியோக்களையும் நிவேதா பெத்துராஜ் ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் "லேடி தல" என்றே கூப்பிட ஆரம்பித்து விட்டனர். நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் சினிமாவை தாண்டி பல சாதனைகளையும் செய்து வருகிறார்.

மதுரை அணியில் விளையாடிய நிவேதா பெத்துராஜ்: மிக்ஸ்ட் டபுள்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணி சார்பாக விளையாடிய நிவேதா பெத்துராஜ் கோப்பை மற்றும் பதக்கத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். பி.வி. சிந்து போல பேட்மிண்டன் விளையாட்டிலும் நிவேதா பெத்துராஜ் அசத்துறாரே சினிமா பக்கம் இனி வருவாரா? மாட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பதக்கத்தை கடித்து: விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பதக்கம் அணிவித்தால். அதை பல்லால் கடித்தபடி போஸ் கொடுப்பார்கள். அதே போல நிவேதா பெத்துராஜும் செம க்யூட்டாக பதக்கத்தை கடிக்கும் போட்டோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











