அட.. அப்போவே விஜய் கூட நடிச்சிருக்காங்க இந்த தர்பார் நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை நிவேதா தாமஸ் நடிகர் விஜயுடன் குருவி படத்தில் நடித்த போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.
கேரள மாநிலம் கண்ணூரை பூர்விகமாக கொண்டவர் நிவேதா தாமஸ். வெருதே ஒரு பர்யா என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நிவேதா தாமஸ்.
தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதா தாமஸ், பிரணயம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தர்பாரில் ரஜினிக்கு மகளாக
தமிழில் போராளி படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

விஜயுடன் நிவேதா தாமஸ்
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நிவேதா தாமஸ். அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ். இந்நிலையில் நிவேதா தாமஸ் விஜயுடன் இருக்கும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கையை போட்டிருக்கும் விஜய்
அதாவது விஜயின் குருவி படத்தில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ். அந்தப் படத்தில் விஜய், அவர் மீது கையை போட்டுக் கொண்டிருப்பது போன்ற போட்டோ பலரால் பகீரப்பட்டு வருகிறது.
Recommended Video

விஜய் த்ரிஷா
குருவி படம் 2008ஆம் ஆண்டு வெளியானது.
தரணி இயக்கத்தில் விஜய் த்ரிஷா நடிப்பில் ஆக்ஷன் பிளஸ் காமெடி படமாக உருவானது. இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் டப் செய்யப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications











