நிவேதா தாமசின் “தர்பார்” ஆரம்பம்!
Recommended Video
சென்னை: நிவேதா தாமஸுக்கு பெரிய பிரேக் கிடைத்துள்ளது. தர்பார் படம் மூலம்.
குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நிவேதா தாமஸ். இவர் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜ ராஜேஸ்வரி எனும் தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு குழந்தைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'மைடியர் பூதம்' எனும் தொடரில் கௌரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த தொடரில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் நிவேதா தாமஸ்.
2008 ஆம் ஆண்டு வெளிவந்த 'வெருதே ஒரு பார்யா ' என்ற மலையாள படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவுக்கு மகளாக நடித்து இருந்தார். இந்த படத்தில் இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது, அந்த மாநில அரசால் வழங்கப்பட்டது. அதன் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பேசும்படியாக இல்லை, குருவி படத்தில் விஜயுடன் ஒரு சில காட்சிகளில் நடித்து இருப்பார்.
2013ல் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் படத்தின் மூலம் தமிழில் தனி கதாநாயகியாகவும் அறிமுகமானார் நிவேதா. அதன் பிறகு ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். அப்போது தான் நிவேதா பலராலும் கவனிக்கப்பட்டார்.
இதன் பிறகு 2015ல் வெளிவந்த பாபநாசத்தில் கமல், கௌதமிக்கு மகளாக நடித்து அசத்தி இருப்பார். அப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து நிவேதா தாமஸ் பலராலும் பாராட்டப்பட்டார். அதன் பிறகு தெலுங்கில் படு பிசியாகிப்போன நிவேதா இரண்டு வருடங்களாக தெலுங்கை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிக்கவில்லை. தற்போது தர்பாரில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மூலம் தமிழில் ஒரு ரவுன்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











