»   »  இவளுக்கு எப்படி கிடைச்சுச்சு: வயித்தெரிச்சலில் முன்னணி ஹீரோயின்கள்

இவளுக்கு எப்படி கிடைச்சுச்சு: வயித்தெரிச்சலில் முன்னணி ஹீரோயின்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஜூனியர் என்.டி.ஆரின் புதுப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிவேதா தாமஸ்.

ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாகவும், பாபநாசம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாஸனின் மகளாகவும் நடித்தவர் கேரளாவை சேர்ந்த நிவேதா தாமஸ்.

நானியின் ஜென்டில்மேன் படம் மூலம் டோலிவுட் சென்றார்.

நானி

நானி

முதல் படமும் சரி, இரண்டாவது படமும் சரி நானியுடன் நடித்தார். இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நிவேதா பிரபலம் ஆகிவிட்டார்.

ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர். கே. எஸ். ரவீந்திரா இயக்கத்தில் ஜெய் லவா குசா படத்தில் நடிக்கிறார்.

நாயகி

நாயகி

ஜெய் லவா குசா படத்தின் ஹீரோயினாக நிவேதா தாமஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தை ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரர் நந்தமுரி கல்யாண் ராம் தயாரிக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு திரையுலகில் பெரிய ஆளாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் நிவேதா தாமஸுக்கு ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

English summary
Nivetha Thomas has been roped in Junior NTR's upcoming movie Jai Lava Kusa to be directed by KS Ravindra of Sardaar Gabbar Singh fame.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil