தர்பாரின் மாபெரும் ரகசியம்.. போட்டுடைத்த நிவேதா தாமஸ்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து வரும் நிவேதா தாமஸ், அந்த படத்தில் தனது தந்தை ரஜினியின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என டிவீட் செய்துள்ளார்.

Recommended Video

Darbar Bigg Secret : தர்பாரின் மாபெரும் ரகசியம்-வீடியோ

சென்னை: 2020 பொங்கல் பண்டிகை விருந்தாக ரஜினியின் தர்பார் படம் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில், தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக தான் நடித்துள்ளதாகவும், போலீஸ் அதிகாரியாக மிரட்டவுள்ள ரஜினியின் பெயர் ரகசியத்தையும் நிவேதா தாமஸ் ரிவீல் செய்துள்ளார்.

நாயகி டு மகள்

நாயகி டு மகள்

தமிழில் ஜெய்யுடன் நவீன சரஸ்வதி சபதம் மற்றும் தெலுங்கில் நானியுடன் நின்னுக்கோரி மற்றும் ஜென்டில்மேன் படங்களில் நாயகியாக நடித்து வந்த நிவேதா தாமஸ், பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

கமலுக்கு மகளாக நடித்து பிரபலமான நிவேதா தாமஸ், ஏற்கனவே விஜய்யின் ஜில்லா படத்தில் மோகன் லாலின் மகளாக நடித்துள்ளார். தற்போது, ரஜினியின் தர்பார் படத்தில் அவருக்கு மகளாக நடித்து வருகிறார்.

நிறைவேறிய ஆசை

நிறைவேறிய ஆசை

கமல் மற்றும் மோகன் லாலுடன் நடித்திருந்த நிவேதா தாமஸுக்கு, சிறு வயதில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாம். இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தனது நெடுநாள் ஆசை நிறைவேறியதாகவும் நிவேதா கூறியுள்ளார்.

மீண்டும் அருணாச்சலம்

மீண்டும் அருணாச்சலம்

சுந்தர்.சி இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான ரஜினியின் அருணாச்சலம் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இந்நிலையில், தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திர பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்ற ரகசியத்தை நிவேதா தாமாஸ் போட்டுடைத்துள்ளார்.

அந்த டிவீட்

இப்போது உலகம் அறிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. தர்பாரில் ரஜினியின் கதாபாத்திர பெயர் ஆதித்யா அருணாச்சலம் மேலும் அவர் தான் என் அப்பா என நிவேதா தாமஸ் சற்று முன் போட்டுள்ள டிவீட் மூலம் தான் அந்த ரகசியம் அதிகாரப்பூர்வமாக அம்பலமானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X