Don't Miss!
- News சென்னையில் 3 பேர் உயிரிழந்த பப் விபத்து.. 12 பேர் மீது வழக்குப்பதிவு.. இரவோடு இரவாக போலீஸ் அதிரடி
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இது எப்படி இருக்கு...ரஜினி ஸ்டைலில் நிவேதா தாமஸின் வைரல் ஃபோட்டோ
திருவனந்தபுரம் : மலையாள நடிகையான நிவேதா தாமஸ், த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார். தனது அழகான, க்யூட்டான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
இதைத் தொடர்ந்து ரஜினி நடித்த தர்பார் படத்தில் ரஜினிக்கும் மகளாக நடித்தார். தமிழில் என்ட்ரி ஆனதுமே டாப் ஹீரோக்கள் இரண்டு பேருடனும் இணைந்து நடித்ததால் நிவேதா தாமசின் மார்க்கெட் எங்கோ போய் விட்டது.
சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு விதவிதமான தனது ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் நிவேதா தாமஸ்.
இந்நிலையில் இன்று, வாயில் சிகரெட்டுடன் நிற்கும் ரஜினியின் இளமை கால கட்அவுட் பக்கத்தில் நின்று, அதே ஸ்டைலில் இடுப்பில் கை வைத்து போஸ் கொடுத்து ஃபோட்டோ வெளியிட்டுள்ளார்.
விஜய்க்கு பிரம்மாண்ட சிலை...அதகளப்படுத்தும் விஜய் ரசிகர்கள்
இது எப்படி இருக்கு என்ற பிரபலமான ரஜினி டயலாக்கை கேப்ஷனாக வெளியிட்டுள்ளார் நிவேதா. இந்த ஃபோட்டோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. பதிவிட்ட 7 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.