Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Automobiles
புதிய இ-பைக்கிற்காக இத்தாலி நிறுவனத்தோட இணைந்த ஒகினவா... உலகளவில் 50 டெக்னீசியன்களையும் களமிறக்க திட்டம்!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிவேதா தாமஸ்... அனைவரும் கட்டாயமாக போட்டுங்க !
சென்னை : தெலுங்கில் பட்டையைக் கிளப்பிய வக்கீல் சாப் திரைப்படத்தில் பாதிக்கப்பட்ட 3 பெண்களில் ஒருவராக நிவேதா தாமஸ் நடித்திருப்பார்.
இப்பொழுது பிரபல கொரியன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.
Film
review:
எப்படி
இருக்கிறது
ஜெகமே
தந்திரம்..
விமர்சனம்
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தடுப்பூசி தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நடிகை நிவேதா தாமஸ் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டதுடன் மக்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மூன்று பெண்களில்
ஹிந்தியில் வெளியாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற பிங் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கும் ஹிட்டடித்தது. இந்த நிலையில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வக்கீல் சாப் தயாராகி கடந்த மாதம் வெளியானது. வெளியான நாள் முதலே வசூல் வேட்டை நடித்தி வந்த இந்த இப்படத்தில் பாதிக்கப்பட்ட மூன்று இளம் பெண்களில் ஒருவராக நிவேதா தாமஸ் நடித்திருப்பார்.

பாபநாசம் 2
த்ரிஷ்யம் 2 வெற்றியைத் தொடர்ந்து பாபநாசம் 2 தமிழில் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது . அதன் அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் பாகத்தில் மெயின் ரோலில் நடித்திருந்த நிவேதா தாமஸ் இரண்டாம் பாகத்திலும் கட்டாயமாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கௌதமிக்கு பதிலாக நடிகை மீனா இந்த முறை நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இரண்டாம்கட்ட படப்பிடிப்பு
2017ல் கொரிய மொழியில் வெளியாகி பட்டையை கிளப்பிய மிட்நைட் ரன்னர்ஸ் தற்பொழுது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. நிவேதா தாமஸ் மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடித்து வரும் இந்த படத்திற்கு "ஷகினி டாகினு " என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுவாமி ரா ரா மற்றும் ரணரங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுதீர் வர்மா இப்படத்தை இயக்கி வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிவுற்றது கொரோனா அலை முடிந்தவுடன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தயக்கம் இன்றி
கொரோனா இரண்டாவது அலை சற்று தணிந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல மக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை நிவேதா தாமஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை தயக்கத்தால் தடுப்பூசி போடாமல் இருக்கும் மக்கள் அனைவரும் தயக்கம் இன்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.