கமல் மகள் இனி ரஜினிக்கும் மகள்.. எப்படி தெரியுமா?

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

By Staff

சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். ரஜினியின் 166-வது படமாக உருவாகும் அப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வரும் 10ம் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இவர் பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கேள்வி:

ரசிகர்கள் கேள்வி:

தொடர்ந்து காலா, கபாலி என வயதான தோற்றத்தில் மகன், மகள் கதாபாத்திரங்களுடன் நடித்திருந்த ரஜினி, பேட்ட படத்தில் தான் மீண்டும் இளமையான, ஸ்டைலீசான தோற்றத்துக்கு மாறி இருந்தார். ஆனால் இப்படத்தில் இவ்வளவு பெரிய மகள் இருக்கிறார் என்றால் நிச்சயம் வயதான தோற்றத்தில் மீண்டும் ரஜினி நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

நயன்:

நயன்:

அதோடு, ரஜினியின் ஜோடியாக இப்படத்தில் நயன் நடிக்கிறார். அப்படியென்றால் நிவேதா தாமஸுக்கு அம்மாவாக அவர் நடிக்கிறாரா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விஸ்வாசம் படத்தில் டீன் ஏஜ் பெண்ணிற்கு தாயாக நயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 போலீஸ் கதை:

போலீஸ் கதை:

முன்னதாக இப்படம் அரசியல் படமாக உருவாவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இணையத்தில் கசிந்த ரஜினியின் போட்டோஷூட் படங்கள் மூலம், அவர் இப்படத்தில் போலீசாக நடிப்பது உறுதியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் இசை:

அனிருத் இசை:

அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எஸ்.ஜே.சூர்யா:

எஸ்.ஜே.சூர்யா:

அதோடு ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மேலும் சில படங்களில் அவர் வில்லனாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X