Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னா ஷாட்யா... தோனிக்கே டஃப் கொடுக்கும் நிவேதா தாமஸ்.. ஜஸ்ட் மிஸ்ல மண்டை பொளந்திருக்கும்!
கொச்சி : 90களில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை நிவேதா தாமஸ்.
விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இத்தனை நாட்களுக்குள் ஜகமே தந்திரம் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுமாம்!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நிவேதா தாமஸ் இப்பொழுது தோனிக்கே டஃப் கொடுக்கும் வகையில் கிரிக்கெட் விளையாடி பட்டையைக் கிளப்பியுள்ளார்.

தெலுங்கிலும் வாய்ப்புகள்
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவருக்கும் பரிச்சயமாகி இருந்த நிவேதா தாமஸ் இப்பொழுது கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த்,விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பெரும்பாலும் தோன்றும் இவருக்கு மலையாளம் மற்றும் தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

நவீன சரஸ்வதி சபதம்
குருவியில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் மீண்டும் ஜில்லா படத்தில் தங்கையாக நடித்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகளாக தர்பார் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றவர். அது தவிர போராளி, நவீன சரஸ்வதி சபதம் போன்ற தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தெலுங்கில் பிரபலமான நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மிட்நைட் ரன்னர் தெலுங்கு ரீமேக்
இந்தியில் மெகா ஹிட் வெற்றி பெற்ற பிங்க், பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. லீட் ரோலில் நடித்த மூன்று பெண்களில் ஒருவராக நிவேதா தாமஸ் நடித்து ஸ்கோர் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து மிட்நைட் ரன்னர் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நூலிழையில் மிஸ்
மலையாளம்,தெலுங்கு, தமிழ் என ரவுண்டு கட்டி நடித்துக்கொண்டிருக்கும் நிவேதா தாமஸ் கிரிக்கெட்டிலும் புகுந்து விளையாடுகிறார். ஊரடங்கு என்பதால் படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் விளையாடிய நிவேதா கிரிக்கெட் வீரர் தோனிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தாறுமாறாக விளையாட அதில் ஒரு பால் நூலிழையில் பவுலரின் மண்டையை பதம் பார்க்காமலும் அருகில் இருக்கும் கம்பியை தொடாமலும் சும்மா நச்சுனு ஒரு ஷாட் அடித்துள்ளார். இந்த வீடியோ இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.