தம்பி பாகுபலி ஓரமா போங்க, காயங்குளம் கொச்சுண்ணி வந்துட்டார்

கொச்சி: பாகுபலி 2 திரைப்படத்தின் சாதனையை காயங்குளம் கொச்சுண்ணி திரைப்படம் முறியடித்துள்ளது.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகியுள்ள படம் காயங்குளம் கொச்சுண்ணி. இப்படத்தில் பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வேய்ன், பாபு அந்தோனி மற்றும் பலர் நடித்துள்ளனர். மோகன்லால் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

படத்தின் கதை 18ஆம் நூற்றாண்டில் நடக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

முதல்நாள்

முதல்நாள்

கேரள மாநில திரையரங்குகளில் முதல்நாளே அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்றால் அது பாகுபலி 2 தான். அந்த சாதனையை தற்போது நிவின் பாலியின் காயங்குளம் கொச்சுண்ணி படம் முறியடித்துள்ளது. இன்று ரிலீசாகியுள்ள இப்படம், கேரளா முழுவதிலும் 1600 காட்சிகள் திரையிடப்படுகிறது. இதற்கு முன்பு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் வெளியான பாகுபலி 2 கேரளாவில் 1370 காட்சிகள் ஓடியது.

மூவி மாரத்தான்

மூவி மாரத்தான்

இப்படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன் "ஒரு தயாரிப்பாளராக என்னுடைய திரைப்படம் அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, எங்கள் படம் இந்தியாவின் முதல் மூவி மாரத்தான் என்று அழைக்கப்படுவதை விட ஒரு தயாரிப்பாளராக வேறு என்ன சந்தோஷம் வேண்டும். ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில், என் திரைப்படங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறேன்.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

நமது மதிப்புகளை பாரம்பரிய மற்றும் கலாச்சார விஷயங்கள் மூலம் சொல்லி, பிரமாண்டமான படங்களை கொடுப்பதன் மூலம் உயர்த்தலாம். அந்த வகையில் ஒரு பிரமாண்டமான அனுபவத்தை நமக்கு கொடுக்க கார்னிவல் சினிமாஸ் முன் வந்திருக்கிறது. நாம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வழங்க இருக்கிறது. தங்களை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்தோடு செயல்படாமல், புதுமையான மற்றும் தனித்துவமான ஐடியாக்களை முன்னெடுத்து செல்வதில் முன்னோடியான அத்தகைய ஒரு மிகப்பெரிய பிராண்டுடன் இணைந்து செயல்படுவது பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இது ஒட்டுமொத்த அணிக்கும் கிடைத்த ஒரு பாக்கியம்" என கோகுலன் கோபாலன் தெரிவித்துள்ளார்.

18ஆம் நூற்றாண்டு

18ஆம் நூற்றாண்டு

இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். பினோத் பிரதான், நிரவ் ஷா மற்றும் சுதீர் பல்சனே ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த படம் நம்மை 18ஆம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்வதாக படம் பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X