»   »  ஜோதிகாவின் ரசிகரான பிரேமம் நிவின்பாலி

ஜோதிகாவின் ரசிகரான பிரேமம் நிவின்பாலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேமம் படம் மூலம் தமிழக ரசிகைகளை கொள்ளை கொண்ட நிவின்பாலி, நடிகை ஜோதிகாவின் தீவிர ரசிகராம்.

தனது ஆஸ்தான நடிகை ஜோதிகாவை சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் நேரில் சந்தித்து பேசிய புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்டு லட்சக்கணக்கில் லைக் அள்ளியுள்ளார் நிவின் பாலி.

Nivin Pauly's Fanboy Moment With Jyothika Takes Social Media By Storm!

ஒரு சில நடிகர்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும், ரசிகர்கள் மீண்டும் அவர்களை எப்போது திரையில் பார்ப்போம் என ஏங்குவர். அப்படி பல ரசிகர்கள் இந்த நாயகி மீண்டும் நடிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தவர் நடிகை ஜோதிகா.

இன்று இளம் ரசிகர்களின்.. இல்லையில்லை ரசிகைகளின் மனதை கொள்ளைகொண்ட மலையாள சினிமாவின் இளம் நடிகர் நிவின்பாலியும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே நடிகை ஜோதிகாவின் ரசிகராக இருப்பவர் தான். ஆனால் இதுநாள் வரை ஜோதிகாவை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு நிவின்பாலிக்கு கிட்டவே இல்லை.

அவரை அருகில் பார்த்து ஒரு ஹலோ சொல்லிவிட்டால் போதும் என நினைத்துக்கொண்டிருந்த நிவின்பாலிக்கு சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.. '36 வயதினிலே' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறப்பு விருது ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த ஜோதிகா அரங்கத்துக்குள் நுழைந்தபோது நிவின்பாலி இருக்கும் வரிசையை கடந்துசெல்ல வேண்டியிருந்தது. அப்போது ஒரு ரசிகராக மாறிய நிவின்பாலி எழுந்து அவருக்கு வணக்கம் சொல்ல, பதிலுக்கு ஜோதிகாவும் சிறிது நேரம் நின்று அவருடன் பேசிவிட்டுத்தான் சென்றார்.

இந்த நிகழ்வை ஒருவர் கிளிக்க.. அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டு பதிவிட்டிருந்தார் நிவின்பாலி. இந்த போட்டோ வைரலானது. கூடவே லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளியது.

English summary
Recently, Nivin shared his fanboy moment with his favourite actress Jyothika on his official Facebook page. The picture has already crossed 1.46 Lakhs likes and has been going viral on social media.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil