twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம்பவே முடியல அந்த காதல் மேஜிக்கை.. 6 ஆண்டுகளை கடந்த பிரேமம்.. நிவின் பாலி நெகிழ்ச்சி!

    |

    திருவனந்தபுரம்: அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா சபாஸ்டியன் நடிப்பில் வெளியான பிரேமம் படம் இன்றுடன் தனது 6வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

    அதுவரை மலையாள சினிமா படங்களையே பார்க்காத சென்னை ரசிகர்களையும் மலையாள சினிமாக்கள் மீது காதல் கொள்ள வைத்த மேஜிக்கை செய்த படம் பிரேமம்.

    ஜாதியைத் துறந்த ஜனனி.. தெறிக்கும் இணையதளம்.. குவியும் பாராட்டுகள் ஜாதியைத் துறந்த ஜனனி.. தெறிக்கும் இணையதளம்.. குவியும் பாராட்டுகள்

    இத்தனைக்கும் தமிழில் வெளியான சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் மையக் கருதான்.

    காதலிக்க வைத்த பிரேமம்

    காதலிக்க வைத்த பிரேமம்

    கடந்த 2016ம் ஆண்டு மே 29ம் தேதி திரையரங்குகளில் வெளியான பிரேமம் திரைப்படம் ஆரம்ப நொடி முதல் 164 நிமிடங்கள் வரை தியேட்டர்களில் இளைஞர்கள் உள்ளங்களில் காதல் விதைகளை தூவிக் கொண்டே வந்தது. அதுவரை மலையாள படங்கள் மீது பெரிதும் ஆர்வமில்லாத சென்னை ரசிகர்களையும் மலையாள சினிமாக்கள் மீது காதல் கொள்ள செய்தது.

    அல்போன்ஸ் புத்திரன் மேஜிக்

    அல்போன்ஸ் புத்திரன் மேஜிக்

    2013ம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் 2016ம் ஆண்டு மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து செய்த மேஜிக் தான் பிரேமம். பட்டாம்பூச்சி டைட்டில் டிசைன் முதல், மூன்று அழகான நடிகைகள், காதல் கதைகள், யதார்த்தம், கண்ணீர், சோகம், நய்யாண்டி, தெனாவட்டு என இளைஞர்கள் பல்ஸை பிடித்து இயக்கி இருப்பார்.

    டோட்டல் டிரான்ஸ்பர்மேஷன்

    டோட்டல் டிரான்ஸ்பர்மேஷன்

    ஸ்கூல் பையன் நிவின் பாலி, கல்லூரியில் ரவுடி மற்றும் ரொமாண்டிக் பாய் கடைசியாக பொறுப்புள்ள பேக்கரியில் வேலை செய்பவர் என காட்சிக்கு காட்சி டோட்டல் டிரான்ஸ்பர்மேஷன் கொடுத்து நடித்து அசத்தி இருப்பார் நிவின் பாலி. அதே போல பாடல்கள் ஒன்றுமே வேறலெவல் ஹிட்.

    அந்த ஒரு டான்ஸ் சீன் போதும்

    அந்த ஒரு டான்ஸ் சீன் போதும்

    தமிழ் பேசும் மலர் டீச்சராக அறிமுகமாகும் சாய் பல்லவி நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்களுக்கு கல்சரஸில் நடனமாட ஸ்டெப்ஸ் சொல்லித் தர களமிறங்கி குத்தாட்டம் போடும் அந்த ஒரு காட்சி ஒட்டுமொத்த இளைஞர்களையும் பிரேமம் மீது பிராந்தாக வைத்து விட்டது. சென்னை சத்யம் தியேட்டரிலேயே 200 நாட்களுக்கு மேல் அந்த படம் ஓடியது குறிப்பிடத்தக்கது.

    6 ஆண்டுகள் ஆகிடுச்சு

    6 ஆண்டுகள் ஆகிடுச்சு

    பிரேமம் படம் ரிலீசாகி 6 ஆண்டுகள் கடந்து விட்டதை தொடர்ந்து ரசிகர்கள் #6YearsofPremam என்ற ஹாஷ்டேக்கை கொண்டாடி வருகின்றனர். நடிகர் நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில், "Butterflies are mentally mental, so is love..." Can't believe it's 6 years! Thank you for the magic dear Alphonse Puthiren" என பாராட்டியுள்ளார்.

    தமிழில் ரீமேக்

    தமிழில் ரீமேக்

    பிரேமம் படத்தை தெலுங்கில் நாக சைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ரீமேக் செய்தனர். ஆனால், மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் அளவுக்கு இல்லை என ட்ரோல்கள் குவிந்தன. தமிழில் பிரேமம் படத்தை ரீமேக் செய்யப் போவதாக பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், ரசிகர்கள் பெரும்பாலும் மலையாள பிரேமம் தான் பெஸ்ட் என்றும் அதனை தமிழில் ரீமேக் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தனர். அதே போல அந்த படத்தை இதுவரை தமிழில் யாரும் ரீமேக் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Nivin Pauly thanked Alphonse Puthiren for the lovable magic Premam. Fans trending #6YearsofPremam in Twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X