இதுதான் டைட்டில்.. அறிமுகமான ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேரும் 'பொன்னியின் செல்வன்' பூங்குழலி..!
கொச்சி: தான் அறிமுகமான ஹீரோவுடன் மீண்டும் இணைய இருக்கிறார் தனுஷ் பட ஹீரோயின்.
Recommended Video
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த படம், ஆக்ஷன். இதில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன்
மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக, நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர். மலையாளத்தில் டோவினோ தாமஸ், பகத் பாசில், ஆசிப் அலி உட்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இப்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, லால், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர்.

படகு ஓட்டி பயிற்சி
இதில், பூங்குழலி கேரக்டரில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக, படகு ஓட்டி பயிற்சிப் பெற்றுள்ளார், ஐஸ்வர்யா லட்சுமி. தாய்லாந்தில் நடந்த இதன் ஷூட்டிங்கில் பங்கேற்றார். கொரோனா வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இந்நிலையில் சில மாநிலங்களில் படப்பிடிப்பை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

நிவின் பாலி ஜோடி
இதனால் ஒரு சில படங்களின் ஷூட்டிங், குறைவான நபர்களை கொண்டு நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் அடுத்த மலையாளப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர் நிவின் பாலி ஜோடியாக மீண்டும் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு பிஸ்மி ஸ்பெஷல் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

சினிமாவில் பத்து வருடம்
இதை அறிமுக இயக்குனர் ராஜேஷ் ரவி இயக்குகிறார். நிவின் பாலி சினிமாவுக்கு வந்து கடந்த 16 ஆம் தேதி பத்து வருடம் ஆனது. இதையடுத்து இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் டைட்டில் போஸ்டரை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஷோபியா பால் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சனு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சுஷி ஷ்யாம் இசை அமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











