'விசுவாசம்' படத்தில் அஜித்துடன் இணையும் நிவின் பாலி? #Viswasam

By Vignesh Selvaraj

சென்னை : சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கவிருக்கும் படம் 'விசுவாசம்'. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், 'விசுவாசம்' படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோ நிவின் பாலி நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசுவாசம்

விசுவாசம்

அஜித்தின் 58-வது படமான 'விசுவாசம்' படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். சில வருடங்களாக அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவரது ஸ்டைலை மாற்றி யூத்தாக நடிக்க வைக்க இருக்கிறாராம் சிவா.

மலையாள ஹீரோக்கள்

மலையாள ஹீரோக்கள்

சமீபகாலமாக நிவின் பாலி, துல்கர் சல்மான், ஃபகத் பாசில் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் தமிழ்ப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெரிய படங்களில்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தாலும் தயங்காமல் நடிக்கிறார்கள்.

பெரிய மார்க்கெட்

பெரிய மார்க்கெட்

மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும், நிவின் பாலி உள்ளிட்டோர் தமிழ் படங்களில் நடிப்பதற்குக் காரணம் கோலிவுட் பெரிய மார்க்கெட் கொண்டது. அதுபோக, நிவின் பாலி, துல்கர், ஃபகத் பாசில் ஆகியோர் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாகவும் உள்ளனர். அதனால், நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

வேலைக்காரன்

வேலைக்காரன்

அந்த வகையில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தில் ஃபகத் பாசில் நடிக்கும் நிலையில், 'ரிச்சி' படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. நிவின் பாலி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.

விசுவாசம் படத்தில்

விசுவாசம் படத்தில்

இந்நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X