பிரதீப் அண்ணா போட்டோவும் போட்டிருக்கலாம்.. இப்போ ஃபீல் பண்ணும் நிக்சன்.. கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி இருந்திருந்தால் இந்நேரம் அதிக வாக்குகளுடன் இந்த சீசன் டைட்டிலையே அவர் தான் தட்டிச் சென்றிருப்பார் என அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், சூழ்ச்சி செய்து அவரை திட்டமிட்டே வெளியே அனுப்பி விட்டு கடைசியில் நிகழ்ச்சி முடியும் போது புல்லி கேங் ஆட்கள் ஒப்பாரி வைப்பது எல்லாம் கொஞ்சம் கூட சகிக்கவில்லை என நிக்சன் பேசிய பேச்சை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங் இன்று நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் யார் டைட்டில் வின்னர் என்கிற விபரங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகி விடும். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே நுழைந்து ஏகப்பட்ட குட்டி கலாட்டா செய்த நிலையில், விசித்ரா உடன் அமர்ந்து கொண்டு நிக்சன் பேசிய பேச்சு தான் தற்போது இணையத்தில் பிரதீப் ஆண்டனி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி வருகிறது.

Nixen feels for Pradeep Antony trolled by Bigg Boss Tamil 7 fans

நாளை கிராண்ட் ஃபினாலே: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவுக்கான படப்பிடிப்பு இன்று நடைபெற்று வரும் நிலையில், நாளை மாலை 6 மணி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இப்போதே பெரு வாரியான கருத்துக் கணிப்பு முடிவுகளும் குறிப்பிட்ட ஒரு போட்டியாளர் தான் டைட்டில் வின்னர் என்பதை முன்னிறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கடைசி நேரத்தில் விஜய் டிவி வேலையை காட்டியதை போல இந்த சீசனிலும் மேஜிக் நிகழுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

மாயாவுக்கு முதலிடம்: பிக் பாஸ் வீட்டில் இந்த சீசன் போட்டியாளர்கள் அனைவரும் அடங்கிய போட்டோ ஒன்று வைத்திருந்தனர். அதில், மாயா முதலிடத்திலும், அவருடன் மணி மற்றும் விஜய் இடம்பெற்றிருந்தனர். அதற்கு கீழ் தினேஷ், மணி மற்றும் அர்ச்சனா என்றும் அதனை தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் என அனைவரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால், பிரதீப் ஆண்டனி புகைப்படம் இடம்பெறவில்லை.

பிரதீப் அண்ணாவையும் போட்டிருக்கலாம்: அதை பார்த்த நிக்சன் இந்த போட்டோவில் பிரதீப் ஆண்டனி அண்ணாவும் இருந்திருக்கலாம் என விசித்ராவிடம் ரொம்பவே ஃபீல் பண்ணி பேசுகிறார். மேலும், அவர் ரொம்ப கெட்டவர், அவர் இந்த வீட்டை விட்டே போயாக வேண்டும் என்றெல்லாம் நான் பேசியதே இல்லை என்றும் நிக்சன் பேசிய பேச்சைக் கேட்டு பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

அவன் ரொம்ப நல்லவன்டா: நிக்சனுக்கு ஆறுதல் கூறும் விதமாக பிரதீப் ரொம்ப நல்லவன்டா நேர்ல போய் பார்த்து பேசு, ஒண்ணும் சொல்ல மாட்டான் எனக் கூறுகிறார். கொஞ்ச நாள் ஆகட்டும் அவர் மனசுல என்ன நினைச்சுக்குவாரோ தெரியல, கொஞ்சம் டைம் கொடுத்து பார்க்குறேன் என நிக்சன் பேசியதை கேட்டதும் ஜோவிகாவையும் பூர்ணிமாவையும் மட்டும் உடனே பார்க்க டைம் இருக்கு என போட்டு பொளந்து வருகின்றனர். நீயெல்லாம் பிரதீப் அண்ணாவை பார்க்கவே தேவையில்லை என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வரை ஒதுக்கி பெரிய தவறு செய்து விட்டது என்றும் திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X