BB7: மோசமான பிரதீப்பையே ஓடவிட்டவன் டா இந்த நிக்சன்.. தினேஷ் எல்லாம் எம்மாத்திரம்.. ஒரே காமெடி!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த சீசன் போட்டியாளர்கள் தொடர்ந்து வித்தியாசம் வித்தியாசமான காமெடிகளை செய்து ரசிகர்களை குபீரென சிரிக்க வைத்து வருகின்றனர்.
அதிலும், நிக்சன் பண்ணும் அலப்பறைகள் எல்லாம் கூல் சுரேஷையே ஓரமாக உட்கார வைத்து விட்டது.

அர்ச்சனாவிடம் அந்த எகிறு எகிறி பேசிய நிக்சன் அடுத்து தினேஷ் உடன் சண்டை பிடித்துள்ளார். இந்நிலையில், அவர் பேசிய பஞ்ச் டயலாக் தான் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
நாயின்னா மட்டும் பயம்: பிக் பாஸ் வீட்டில் தன்னை ஒரு குட்டி டான் ரேஞ்சுக்கு பில்டப் செய்து வைத்துக் கொண்டிருக்கும் நிக்சன் கத்தியை எல்லாம் கையில் வைத்துக் கொண்டு அர்ச்சனாவை மிரட்டுவது போல பூர்ணிமாவிடம் பேசும் காட்சிகள் சமீபத்தில் செம ட்ரோல் செய்யப்பட்டது. ரவுடி போல நிக்சன் பேசி வந்தாலும், அவருக்கு ஒரு நாய் சவுண்ட் போட்டால் ஆஃப் ஆகி விடுவார் என பங்கம் பண்ணி வருகின்றனர்.
பிரதீப்பையே ஓடவிட்டவன்: பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியதில் தனக்குத் தான் பெரும் பங்கு இருக்கு என்றும் பெண் போட்டியாளர்களை ஒன்று திரட்டி ரெட் கார்டு கொடுக்க சொன்னதே தான் தான் என்கிற ரேஞ்சில் நிக்சன் பேசிய பேச்சுக்களை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.
தினேஷ் எல்லாம் எம்மாத்திரம்: மோசமான பிரதீப்பிடமே அவ்ளோ நேரம் ஆர்க்யூமென்ட் பண்ணி அவரை ஓடவிட்டவன் நான், இந்த தினேஷ் எல்லாம் எம்மாத்திரம் என கெத்தாக பேசுவது போல நிக்சன் பேசியதை பார்த்த பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் இந்த வாரமே நிக்சனுக்கு போட்ட பாயாசத்துல இருந்து மிஸ் ஆகி விட்டார் என்றும் அடுத்த வாரமும் இதே பாயாசத்தை போட்டு தம்பியை வெளியே வரவழைத்து செய்முறை எல்லாம் செய்யலாம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
வனிதாவுக்கே மூஞ்சில குத்து: பிரதீப் ஆண்டனி பற்றி தப்பாக பேசியதாக வனிதா விஜயகுமாருக்கே முகத்தில் பிரதீப் ரசிகர் ஒருவர் குத்தி விட்டதாக வனிதா கூறியிருந்தார். இந்நிலையில், நிக்சன் எல்லாம் வெளியே வந்தால் அவரது நிலைமை என்ன ஆகுமோ என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











