twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆவணப்படம், குறும்பட விழாக்கள் பற்றி வகுப்பு.. மதுரையில் குறும்பட பயிற்சி பட்டறை துவக்கம்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    மதுரையில் குறும்பட பயிற்சி பட்டறை துவக்கம்!-வீடியோ

    மதுரை : நிழல் இதழ் பதியம் தொலைநொக்கு படைப்பகத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் குறும்பட பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறது. நிழல் இதழ் - பதியம் இணைந்து நடத்தும் 51-வது குறும்பட பயிற்சி பட்டறை மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள சந்திர குழந்தை மகாலில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முதல் (மே 7) தொடங்கிய இந்த பயிற்சி பட்டறையில், முதல் நாள் நிகழ்வில் தலைமை ஏற்று, பட்டறையில் கலந்துகொண்ட மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை வாழ்த்தியும் பேசியுள்ளார் பதியம் பாரதிவாசன்.

    Nizhal Short film workshop starts in madurai

    மே 12-ம் தேதி வரை ஆறு நாட்கள் நடைபெறும் இந்தப் பட்டறையின் துவக்க நாளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முனைவர் ந.முருகேசபாண்டியன் அவர்கள் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

    Nizhal Short film workshop starts in madurai

    பண்பாட்டு மாற்றத்தின் தேவையில் சினிமாவின் பங்கு , சினிமா ஆக்கத்தில் ஈடுபடுவோர் தங்களை எப்படி அதற்கேற்றவாறு புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என கள செயற்பாட்டாளர் மீ.தா.பாண்டியன் பேசினார்.

    குறும்பட ஆவணப்பட வரலாறு மற்றும் அதன் வகைகள் பற்றியும் குறும்பட விழாக்கள் பற்றியும் நிழல் திருநாவுக்கரசு வகுப்பு எடுத்தார். இந்தப் பட்டறையில் உலகப்புகழ்பெற்ற குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

    Nizhal Short film workshop starts in madurai

    அடுத்தடுத்த பட்டறை நிகழ்வுகளில், 'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களின் இயக்குநர் மீரா.கதிரவன், 'உறுமீன்' இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி, 'எங்கிட்ட மோதாதே' இயக்குநர் ராமு செல்லப்பா, நடிகர் வசுமித்ர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சியளிக்கிறார்கள்.

    Nizhal Short film workshop starts in madurai

    இந்த பயிற்சி பட்டறையில் திரைக்கதை எழுதுதல், கேமராவை இயக்குதல், ஷாட்களாக பி‌ரித்து எப்படி படமாக்குதல், ஒளிப்பதிவின் நுணுக்கங்கள், நடிப்பு, எடிட்டிங், தொலைக்காட்சிகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதுதல், மேக்கப் பயிற்சி என அனைத்தும் கற்றுத் தரப்படுகிறது.

    English summary
    Nizhal short film works shop started in madurai theppakulam. Nizha thirunaavukarasu teaches about documentary films and short film festivals.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X