அடேங்கப்பா.. இத்தாலி, ஜப்பானில் இருந்து வந்த ஐட்டங்கள்.. நிழல்கள் ரவியின் வீட்டை பார்த்தீங்களா?

சென்னை: 67 வயதாகும் நடிகர் நிழல்கள் ரவி தனது வீட்டை சுற்றிக் காட்டியுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வீட்டை சுற்றிக் காட்டிக் கொண்டே சினிமாவில் தான் எப்படி அறிமுகமானேன் தனது உண்மையான பெயர் என்ன? என பல விசயங்களை சுவாரஸ்யமாக பேசி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

நிழல்கள் படத்தில் அறிமுகமான ரவிச்சந்திரன் நிழல்கள் ரவி என மாறிவிட்டார். ஆரம்பத்தில் ஹீரோவாகவும் அதன் பின்னர் வில்லனாகவும் நடித்தவர் சமீப காலமாக சந்தானம் படங்களில் காமெடியனாக மாறி கலக்கி வருகிறார்.

Nizhalgal Ravi home tour video out now

டிக்கிலோனா படத்தைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் மேஜர் சந்திரகாந்த் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்.

நிழல்கள் ரவியின் ஹோம் டூர்: யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது வீட்டை சுற்றிக் காட்டிய நிழல்கள் ரவி தனது வீட்டிலேயே அந்த பேட்டியையும் கொடுத்துள்ளார். இத்தாலியில் இருந்து வந்த மார்பிள்ஸ், ஜப்பானில் இருந்து வந்த லாஃபிங் புத்தா சிலை என ஆரம்பமே அமர்க்களமாக இருந்த அவரது வீடு வெளியே பார்க்க சின்ன வீடு போல தெரிந்தாலும், உள்ளே நுழைந்ததும் டூப்ளெக்ஸ் வீடாக உயர்ந்து நின்று பிரம்மிக்க வைக்கிறது.

மனைவி வரைந்த தஞ்சாவூர் ஓவியங்கள்: பெரிய சைஸ் டிவி, பூஜை அறையில் கிருஷ்ணர், பெருமாள் சிலைகள் என பச்சைக் கற்பூர வாசத்தால் மணமணக்க ஹாலில் தனது மனைவி விஷ்ணுப்பிரியா வரைந்த தஞ்சாவூர் ஓவியங்களை மாட்டி வைத்திருப்பதையும் காட்டியுள்ளார் நிழல்கள் ரவி.

மெட்டாலிக் வாய்ஸ்னு சொன்னாங்க: பாரதிராஜா படத்தில் விஜயன் கேரக்டருக்கு வாய்ஸ் கொடுக்க யாரை அணுகுவது என பாரதிராஜா யோசித்துக் கொண்டிருந்த நிலையில், உடனடியா நான் ட்ரை பண்ணவான்னு கேட்டேன். பிரசாத் ஸ்டூடியோவுக்கு வர சொன்னாங்க, எனக்கு முன் அனுபவமே இல்லை. ஆனால், ட்ரை பண்ணேன். அங்கிருந்த எடிட்டர் என்ன வாய்ஸ் சார் இது உங்களோட வாய்ஸ் மெட்டாலிக் வாய்ஸ்னு பாராட்டினார். நம்ம வாய்ஸா மெட்டாலிக் வாய்ச்னு நினைச்சேன். அடுத்த நாள் பாரதிராஜா அந்த குரலுக்கு டப்பிங் பேசினார். விஜயன் மலையாளத்தில் பேசியதை உங்களால் மேட்ச் பண்ண முடியாது. ஆனால், நம்ம படத்துல நடிக்கிறீங்க என்றார். அப்படி கிடைத்தது தான் நிழல்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு என தனக்கு முதன் முதலில் கிடைத்த வாய்ப்பு குறித்து கூறியுள்ளார் நிழல்கள் ரவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X