நேர்கொண்ட பார்வையை மோசமாக விமர்சித்த வலைஞர்கள் - ட்விட்டரில் வறுத்த வரலட்சுமி

சென்னை: நேர் கொண்ட படத்தைப் பார்த்து நன்றாக புரிந்து கொண்டு பேசுங்கள். பப்புக்கு போறவங்களும், மேற்கத்திய பாணி உடை உடுத்தும் பெண்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று நடிகை வரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். மோசமாக விமர்சனம் செய்பவர்களை படத்தை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும் காட்டமாக ட்விட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் நேற்றிலிருந்து கொண்டாடி வரும் படம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை. இந்த படம் முழுக்க முழுக்க பெண்கள் பிரச்சனையை பற்றி பேசும் படம். இதனாலேயே பலரும் படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.நேர் கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களுக்கென்று பிரத்யேக காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர். ரசிகர்களுக்கு படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த ஸ்பெஷல் ஷோக்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

NKP review Varalaxmi Tweets I hope those 3 men get raped in jail

2016ஆம் ஆண்டில் வெளியான இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக்தான் நேர்கொண்ட பார்வை. மறைந்த ஸ்ரீதேவியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் பட நிறுவனத்திற்கு இந்தப் படத்தை நடித்துக் கொடுத்திருக்கிறார் அஜீத்.

தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத்துக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

NKP review Varalaxmi Tweets I hope those 3 men get raped in jail

வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், 'இந்த நேரத்திற்கு தேவையான படம் இது. அஜித் சார் இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்ததற்காக மகிழ்கிறேன். ஒவ்வொருவரும் இந்தப் படத்தில் இருந்து பாடம் பெறுவார்கள் என நம்புகிறேன். மொத்த படக் குழுவினருக்கும் வாழ்த்துகள். இது நம் சமூகத்தை சிறிதாவது மாற்றும்’ என கூறியிருக்கிறார்.
NKP review Varalaxmi Tweets I hope those 3 men get raped in jail

இந்த நிலையில் வலைப் பேச்சு எனும் ரிவீயூ சேனல் வெளியில் சென்று குடிப்பதனால் பாதிக்கப்படும் பெண்களை குறித்த கதை என்பதால் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியிருந்தனர். மூன்று பேரில் சேரில் உட்கார்ந்து படத்தைப் பற்றி பேசி விமர்சனம் செய்தனர். அவர்கள் விமர்சனத்தில், அந்த பெண்கள் மேலே பரிதாபமே வரலை. அவங்க 18 வயசிலேயே உறவில ஈடுபடுறாங்க. அதனாலதான் அந்த பெண்கள் மேல எந்த பரிதாபமும் வரலை. மேல் தட்டு பெண்கள் பப்புக்கு போறாங்க குடிக்கிறாங்க என்னென்னமோ நடக்குது. அதனால பரிதாபப்பட முடியாது. பிங்க் படத்தில பெண்கள் பப்புக்கு போறது உறவில் ஈடுபடுவது வட இந்தியாவில் சகஜம். அது வெற்றி பெற்றது. தமிழில் இது அந்நியப்பட்ட கதாபாத்திரம். இதனால் பரிதாபம் வரலை. என்ன நடந்தா நமக்கென்ன அப்படிங்கிற மாதிரிதான் நினைக்கத் தோணுது என்று கூறியுள்ளனர்.
NKP review Varalaxmi Tweets I hope those 3 men get raped in jail

இந்த கமெண்ட்டிற்கு பலரும் கண்டனமும் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சகர்களுக்கு பதிலடி தரும் விதமாக பதிவிட்டுள்ளார். முதலில் படத்தை பாருங்க அப்புறம் விமர்சனம் செய்யுங்க என்று கூறியுள்ள வரலட்சுமி, மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் விமர்சகர்களுக்கு பதிலடி தரும் விதமாக, இவர்களை ஜெயிலில் போட்டு பலாத்காரம் செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். படத்தை புரிந்து கொண்டால் விமர்சனம் செய்யுங்கள். இல்லையென்றால் செய்ய வேண்டாம். உங்கள் சொந்த வாழ்க்கையை ரிவியூ செய்யுங்கள் என்று காட்டமாக ட்வீட் போட்டுள்ளார்.


வெளியில் செல்லும் பெண்கள், மேற்கத்திய உடை அணியும் பெண்கள் மட்டும்தான் பலாத்காரம் செய்யப்படுகின்றனரா பாதிக்கப்படுகின்றனரா என்றும் வரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X