சிம்புவின் 9 ஆம் எண் ராசி..வெந்து தணிந்தது காடு படத்தில் கைவிடப்பட்டதா?

சென்னை: தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகர் சிம்பு. சர்ச்சைகளில் சிக்கினாலும் அனைத்தையும் தகர்த்து சாதித்து வருகிறார்.

நடிகர் சிம்பு தனது தந்தையைப்போலவே ஜோதிடம், ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.
எண் கணித ஜோதிடம் மீது நம்பிக்கைக்கொண்ட சிம்புவின் பட அறிவிப்புகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் கூட்டுத்தொகை 9 வரும்படி இருக்கும் எனும் நெட்டிசன்கள் சமீபத்திய அறிவிப்பில் அது மிஸ்ஸானதாக சொல்கின்றனர்.

சிம்பு வைத்துள்ள தகர்க்க முடியாத சாதனை

சிம்பு வைத்துள்ள தகர்க்க முடியாத சாதனை

நடிகர் சிம்பு எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர். தந்தையால் குழ்ந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர். கமல்ஹாசன்கூட 5 வயதில் அறிமுகப்படுத்தப்பட்டு ஸ்டர் ஆனார். விஜய்யும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அறிமுகப்படுத்தப்பட்டு நாயகனானார். ஆனால் 6 மாத குழந்தையாக இருக்கும்போதே அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் நாயகனானவர் சிம்பு ஒருவர் மட்டுமே எனலாம்.

சகலகலா வல்லவன் சிம்பு

சகலகலா வல்லவன் சிம்பு

ஆரம்ப காலங்களில் வேகமாக தன் கலைப்பயணத்தை தொடர்ந்தார் சிம்பு. இசை, பாடல், கதை, இயக்கம், இசைக்கருவிகள் வாசித்தல், ஹோஸ்ட் என பன்முக திறமைகள் கொண்ட சகலகலாவல்லவர் சிம்பு. இளம் கதாநாயகர்களில் சிம்பு அளவுக்கு இவ்வளவு திறமை கொண்டவர்கள் யாரும் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.

சர்ச்சைகளுடன் வளர்ந்த சிம்பு

சர்ச்சைகளுடன் வளர்ந்த சிம்பு

சிம்பு வளர, வளர கூடவே சர்ச்சைகளும் வளர்ந்தது. தனது வேகமான வளர்ச்சிக்கு ஏற்றார்போல் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் சிம்பு காட்டிய அலட்சியம் சிம்பு குறித்த எதிர்மறையான கருத்து திரையுலகில் அவருக்கு ஏற்பட்டது. படபிடிப்புக்கு லேட்டாக வருவது, படபிடிப்பை ரத்து செய்வது, காதல் பிரச்சினையில் சிக்கியது என அவர்மேல் விமர்சனம் வைக்கப்பட்டது. இது அவரது திரைவாழ்வில் பிர்ச்சனையாக மாறியது.

பிரச்சினைகளை எதிர்கொண்டு மீண்ட் சிம்பு

பிரச்சினைகளை எதிர்கொண்டு மீண்ட் சிம்பு

சிம்புவுக்கு எதிராக குறிப்பிட்ட சில நடிகர்கள் கூட்டம் சேர்ந்து கருத்தை விதைக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் சிம்பு காட்டிய அலட்சியமும் அவருக்கு சிக்கலாக அமைந்தது. இந்த நேரத்தில் தனது பிரச்சினைகளை உணர்ந்து அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார் சிம்பு. உடலைக்குறைத்தார், படத்தை முடித்துக்கொடுத்தார். இதனால் இழந்த பெயர் மீண்டும் கிடைத்தது.

மாநாடு வெற்றி திரும்பி பார்க்கவைத்த சிம்பு

மாநாடு வெற்றி திரும்பி பார்க்கவைத்த சிம்பு

மாநாடு பட வெற்றி சிம்பு பக்கம் மீண்டும் தயாரிப்பாளர்களை வரவைத்தது. ஈஸ்வரன் படத்தை யாரும் எதிர்பாராத வகையில் குறுகிய காலத்தில் முடித்து கொடுத்தார். அடுத்து வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இடையில் பிக்பாஸ் சீசன் 5 ஐ கமலுக்கு பதில் சில காலம் அவர் நடத்தியதும், அல்டிமேட்டை நடத்தியதும் அவருக்கு மரியாதையை கூட்டியது.

நெட்டிசன்களின் சந்தேகம்

நெட்டிசன்களின் சந்தேகம்

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. அதில் சில விஷயங்களை நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர். வழக்கமாக சிம்பு தனது தந்தையின் ஆலோசனைப்படி 9 ஆம் எண்ணில் எந்த செயலையும் தொடங்குவார். நடிகர் இயக்குநர் டி.ராஜேந்தர் எண் கணிதம் மீதும், ஜோதிடத்தின்மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

போஸ்டர் முதல் அனைத்தும் ராசி எண் 9

போஸ்டர் முதல் அனைத்தும் ராசி எண் 9

அவரைப்பின்பற்றும் மகன் சிம்புவும் 9 ஆம் எண்ணை தனது அனைத்து செயல்களிலும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி, ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசை என்கிற தலைப்பு மாற்ற போஸ்டர் மதியம் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டது. சிம்பு தனது சமீபத்திய திரைப்படம் தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் 9-ஐ பின்பற்றுவதில் உறுதியாக இருந்தார் என்கின்றனர் நெட்டிசன்கள்.

அனைத்துக்குமே கூட்டு எண் 9

அனைத்துக்குமே கூட்டு எண் 9

இதற்கு உதாரணமாக சிலவற்றை சொல்கின்றனர், சமீபகால உதாரணங்கள் தவிர 'வெந்து தணிந்தது காடு' அறிவிப்பு 12.15 மணிக்கு வெளியானது. கூட்டுத்தொகை 9, 'மாநாடு' டீசர் 5.04 மணிக்கு வெளியானது கூட்டுத்தொகை 9, 'மாநாடு' பர்ஸ்ட் லுக் 10.44, 'மாநாடு' பாடல் வீடியோ மாலை 4.50, சிம்புவின் இன்ஸ்டாகிராம் கணக்கு காலை 9.09 மணிக்கு தொடங்கியது. காலை 9.09 மணிக்கு "திரும்பி வருகிறேன்" என்ற வீடியோ, அதிகாலை 4.32 மணிக்கு 'ஈஸ்வரன்' டீசர் வெளியீடு என பட்டியல் நீள்கிறது என்கின்றனர்.

Recommended Video

அசிங்கமா திட்டினாலும் எடுத்துக்கக்கூடாது... சிம்பு வீடியோ... பகிர்ந்த இளம் நடிகை!
இனியும் தொடருமா 9 ஆம் எண் நம்பிக்கை

இனியும் தொடருமா 9 ஆம் எண் நம்பிக்கை

இந்நிலையில் நேற்று முன் தினம் வெளியான வெந்து தணிந்தது காடு ரிலீஸ் தேதி அறிவிப்பில் இது மிஸ் ஆனது. ஆனால் படம் செப்டம்பர் (9) மாதம் என இருந்தது. தந்தை டி.ஆரின் ஜோதிடக் கணக்கைத்தான் சிம்பு கவனமாகப் பின்பற்றுகிறார் என்று சினிமாத்துறையில் பேச்சு உள்ளது. 'மஹா', 'மாநாடு', 'பத்து தலை', 'வெந்து தணிந்தது காடு', 'கொரோனா குமார்' உள்ளிட்ட வரவிருக்கும் படங்களில் இதே 9 ஆம் எண் ராசியை பின்பற்றுவாரா அல்லது கைவிடுவாரா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X