நடிக்க விருப்பமில்லை டைரக்ஷன் மட்டுமே எனது நோக்கம்-ஈரா கான்
மும்பை: நடிகர் அமீர் கான் மகள் ஈரா, தனது எதிர்காலத்தை பற்றின ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். தனது தந்தை அமீர் கான் போல நடிப்பு மூலம் வாழ்வில் முன்னேற்றம் காணாமல், காமெராவிற்கு பின்னாலிருந்து பாலிவுட்டை கலக்க திட்டமிட்டுள்ளார்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமீர்கான் மகளான ஈரா சமூக வலைதளங்களில் சில பதிவுகள் மூலம் தற்போது மிகவும் பிரபலமாகி, பாலிவுட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தனது எதிர்காலத்தை பற்றின ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். அதாவது தனது தந்தை அமீர் கான் போல நடிப்பு மூலம் எனது வாழ்வில் முன்னேற்றம் காணாமல், காமெராவிற்கு பின்னாலிருந்து பாலிவுட்டை கலக்க திட்டமிட்டுள்ளார். யூரிபைட்ஸ் மீடியாவின் தயாரிப்பில் இயக்குநராகவிருக்கிறார் ஈரா.
தற்போது இந்த வார இறுதி நாட்களை குளிர்ச்சியாக்கும் வகையில் சில த்ரோபேக் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஈரா.
சூரிய அஸ்தமன நேரத்தில் மொட்டை மடியில் இளம் சூடான சிமெண்ட் தரையில் கடலின் பின்னணியில் ஒரு ஸ்டிரைப்டு ஸ்லீவ்ல்ஸ் டி-ஷர்ட்டும் ஷர்ட் டெனிம் ஷார்ட்ஸ் ஒன்றும் அணிந்து கொண்டு அழகிய தென்றலை ரசித்தபடி ஒரு புகைப்படத்தை எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தான் இயக்குநராக அறிமுகமாகும் நாடகத்தின் முதல் போஸ்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பல மாதங்களாக இதற்காக உழைத்திருக்கிறேன். ஆனால் இந்த சந்தோஷமான தகவலைப் பற்றி என்னால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் தற்போது எனக்காக ஒரு ஸ்பான்ஸர், தயாரிப்பாளர், நடிகர்கள் என அனைத்தும் தயாராக உள்ள நிலையில் நான் என்னுடைய இயக்குனர் பணியை பற்றி அறிவித்துள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் அமீர் கான் மகள் ஈரா. அவருக்கு எங்களது வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











