சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை போல் எந்த நடிகருக்கும் நடந்ததில்லை..தயாரிப்பாளர் ரவீந்தர் பகீர்
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிகவும் உச்ச நட்சத்திரமாக உள்ளார்
விஜய், அஜித், ரஜினி ஆகியோரின் படங்களுக்கு நிகராக சிவகார்த்திகேயனின் படங்களும் வசூலில் முன்னிலை வகித்து வருகிறது
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நெப்போடிசத்தால் சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை மாதிரி எந்த நடிகருக்கும் நடந்ததில்லை என தயாரிப்பாளர் ரவீந்தர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் தொகுப்பாளராக
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் நிலைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அப்படியே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பலரும் பெரிய அளவில் ஜொலித்தது இல்லை. அதனை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவிலும் கலக்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

100 கோடி பாக்ஸ் ஆபிஸ்
சிவகார்த்திகேயன் காமெடியுடன் சேர்த்து ஹீரோயிஸத்தையும் காட்டியதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்க ஆரம்பித்தனர். முன்னணி நடிகர்களுக்கு இணையாக சிவகார்த்திகேயனின் திரைப்படங்களும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது . சிவகார்த்திகேயன் படங்கள் பல 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்து அனைவரையும் அதிர வைத்தது இந்த நிலையில் தமிழைத் தொடர்ந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மொழிகளிலும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது.

அபாரமான வளர்ச்சி
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தயாரிப்பாளர் ரவீந்தர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் நடந்த கொடுமைகள் குறித்து பகிரங்கமாக பேசியுள்ளார். அதில் அவர் பேசி உள்ளதாவது சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது.

சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை
பல நடிகர்கள் பல ஆண்டுகளாக செய்ததை சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே செய்ததால் அது சிலருக்கு பிடிக்காமல் போனது. அதனாலேயே அவருக்கு பல வழிகளில் பல பிரச்சனைகளை கொடுத்தனர். கிட்டத்தட்ட பாலிவுட்டில் சுஷாந்த்துக்கு நடந்த கொடுமை மாதிரியே சிவகார்த்திகேயனுக்கும் கொடுமைகள் நடந்தது ஆனால் சிவகார்த்திகேயன் விவரமானவர் படித்தவர் அதனால் அதனை நன்றாக ஹேண்டில் செய்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை மாதிரி எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததில்லை என தயாரிப்பாளர் ரவீந்தர் அந்த நேர்காணலில் பகிரங்கமாக பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











