எந்த ஹீரோவும் ரசிகர்களைத் தூண்டிவிட்டு அப்படி பண்றதில்லை.. மீராவுக்கு பிரபல நடிகை அட்வைஸ்!

By

சென்னை: எந்த நடிகரும் தனது ரசிகர்களை தூண்டிவிட்டு நடிகர், நடிகைகளை கிண்டல் செய்ய சொல்வதில்லை என்று நடிகை பூனம் கவுர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Actors Beard Looks | Sarath Kumar, Vijay Devarkonda, Jr. NTR, Madhavan

நடிகை மீரா சோப்ரா, (நிலா) ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர். பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, எனக்கு மகேஷ்பாபுவைப் பிடிக்கும். ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்கவில்லை, நான் அவர் ரசிகை இல்லை என்று கூறியிருந்தார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இதனால், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள், மீரா சோப்ராவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் வக்கிரமான கருத்துக்களைப் பதிவிட ஆரம்பித்தனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாகவும் திராவகம் வீசுவோம் என்றும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர். ஆபாசமாகவும் ட்வீட் செய்ய ஆரம்பித்தனர். இதனால், நடிகை மீரா சோப்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

எனக்குத் தெரியாது

எனக்குத் தெரியாது

இதையடுத்து அவரது ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்த மீரா சோப்ரா, நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? இந்த ரசிகர்கள், ஜூனியர் என்டிஆர் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி, பெண்கள் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். இதற்கு தார்மீகப் பொறுப்புள்ள நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ட்வீட் மற்றும் வீடியோ செய்தி மூலம் அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும்.

ஒரிஜினல் பெயர்

ஒரிஜினல் பெயர்

அவரால் ரசிகர்களுக்கு ஒரு ட்வீட் கூட போட முடியாதா? நான் முகமில்லாத ரசிகர்களை எதிர்த்து போராடப் போகிறேன். அதில் பலர் தங்கள் ஒரிஜினல் பெயரை வெளிப்படுத்த கூட தைரியம் இல்லாதவர்கள். அதில் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கு பதிலளிப்பார் என்று நம்புகிறேன்' என்று கூறியிருந்தார்.

மதிக்க வேண்டும்

மதிக்க வேண்டும்

இந்நிலையில் நடிகை பாயல் கோஷ், 'ஜூனியர் என்.டி.ஆருக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும் என்று அவருடன் ஓசரவல்லி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளேன்' என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை பூனம் கவுர், நடிகை மீரா சோப்ராவின் பெயரை குறிப்பிடாமல், ட்விட்டரில் அட்வைஸ் செய்துள்ளார்.

புகார் செய்யவில்லை

புகார் செய்யவில்லை

அதில் அவர் கூறியிருப்பதாவது: எந்த காரணமும் இல்லாமல் எனது பெயர் தொடர்ந்து ரசிகர்களால் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, நான் யார் மீதும் புகார் செய்யவில்லை. என்னைத் தொந்தரவு செய்தவர்கள் மீது மட்டுமே புகார் அளித்தேன். ரசிகர்கள் அப்பாவிகள் என்று நம்புகிறேன். இடையில் உள்ளவர்கள், தூண்டிவிடும் வேலை அது.

பொறாமையால்

பொறாமையால்

எந்த நடிகரும் தனது ரசிகர்களை தூண்டிவிட்டு நடிகர், நடிகைகளை கிண்டல் செய்ய சொல்வதில்லை. அவர்களுக்கு அதற்கான நேரமும் கிடையாது. இது பொறாமை காரணங்களால் உருவாக்கப்படுகிறது. கிண்டல், கேலிக்கு ஆளாவது நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி. குற்றச் செயல்களுக்கு புகார் அளிக்கலாம்.

நெஞ்சிருக்கும் வரை

நெஞ்சிருக்கும் வரை

ட்ரோலிங் என்பது விளையாட்டு, அதை கண்டு கொள்ளாமல் சென்றுவிட வேண்டும். இதற்காக ரசிகர்களை குறை கூற வேண்டாம். இவ்வாறு நடிகை பூனம் கவுர் கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள், சரியாக சொல்லி இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர். நடிகை பூனம் கவுர். இவர், தமிழில், நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X